NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Saturday, December 25, 2010

முதலாவது ஆதாரம்

Posted by Rikaz Network Inc. 12:03 AM, under | No comments




முதலாவது ஆதாரம்
உமர் அலிக்கு பைஅத் செய்யாதவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதையும், உமர் அலி, இபாம் போன்றவர்கள் இந்த இஸ்லாமிய உம்மத்தில் குழப்பம் விளைவிக்கின்றார்கள், இவர்கள் பித்னாக்காரர்கள்தான் என்பதையும் உண்மைப் படுத்தும் முதலாவது ஆதாரம். (ஆதாரம் -1) முதலாவதாக நான், ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சகோதரர்களே! இந்த பைஅத் தொடர்பாக வந்திருக்கும் ஹதீஸ்களை நாங்கள் ஒரு போதும் மறுக்க வில்லை. ஒரு முஸ்லிம் ஒருக்காலும் சஹீஹான ஹதீஸ்களை மறுக்கக்கூடாது
என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நான் இப்படி சொல்லக் காரணம், பைஅத் தொடர்பான ஹதீஸ்களை நாங்கள் முன்வைக்கும்போது இந்த முகல்லித் இபாம், முர்தத்தின் வாயாலே சத்தியம் வெளியாகிவிட்டது என்று விடயத்தைப் புரியாமல் கொக்கரிக்கின்றார். ஹதீஸ் என்பது சத்தியம் என நானும் ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆனால் நீங்கள் ஹதீஸ்களை எப்படி விளங்கிக்கொண்டீர்கள்? இதே ஹதீஸ்களை நாங்கள் எப்படி விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதில்தான் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இந்த விடயத்தை ஒரு உதாரணம் மூலமாக விளங்கிக்கொள்ள முயற்சிப்போம். கடந்த காலத்தில், உமர் அலி “லாதுதிஉல் காபிரூன்” என்ற குர்ஆன் வசனத்திற்கு காபிரான ஒரு அரசாங்கம் இடும் சட்டங்களுக்கு கட்டுப்படக் கூடாது என்று கூறினார். இந்தக் குர்ஆன் வசனத்தை நாங்கள் மறுத்தோமா? இல்லையே. பிறகு நாங்கள் என்ன சொன்னோம்? இவர் இந்தக் குர்ஆன் வசனத்திற்கு கொடுக்கும் விளக்கம் பிழை என்றுதான் கூறினோம். ஆகவே அவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களை நாங்களும் குறிப்பிடுவதால், நாங்கள் அவர்கள் கூறும் பிழையான கருத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தம் வராது. இந்த மாதிரியான ஒரு சிறிய விடயம் கூட இந்த இபாமுக்குப் புரிவதில்லை. இவர் எந்த மதரசாவில் படித்தாரோ தெரியாது. ஒன்றுமே மண்டையில் ஏறுவதில்லை. சகோதரர்களே! இந்த ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ன சொல்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். ஒருவர் இஸ்லாத்தினுள் நுழைய வேண்டுமாயின் பைஅத் செய்தாக வேண்டும். அப்படி பைஅத் செய்யாத நிலையில் மரணிப்பவர், ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாக ஹதீஸ்களில் உண்டு, எனவே ஒருவர் தாம் முஸ்லிம் என்று சொல்லவேண்டுமாயின், அவர் கட்டாயமாக பைஅத் செய்திருத்தல் வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றார்கள். இந்த அடிப்படையில் உமர் அலி, பாகிஸ்தானிலுள்ள மஸ்ஊத் என்பவரிடம் பைஅத் செய்துள்ளார். இதனால் உமர் அலி இலங்கையில் முதலாவது முஸ்லிமாக ஆகின்றார். எனவே யாராவது முஸ்லிமாக வேண்டுமாயின் பைஅத் செய்து முஸ்ளிமாகியுள்ள இந்த உமர் அலியிடம் வந்து பைஅத் செய்யவேண்டும் என்பது அவர்கள் எடுத்து வைக்கும் வாதமாகும். சுருக்கமாகச் சொல்லுவதாயின் ஒருவர் தன்னை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளவேண்டுமாயின், அவர் பைஅத் செய்திருத்தல் கட்டாயமாகும் என்பது உமர் அலி முன் வைக்கும் வாதத்தின் அடிப்படையாகும். இந்த வாதம் சரியானதா? பிழையானதா என்பதை விவாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இன்ஷா அல்லாஹ் இதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில், அது பற்றி மேலும் விரிவாக ஆராயப்படும். இந்தக் கட்டுரையின் நோக்கம், நீங்கள் எடுத்து வைக்கும் இந்தக் கொள்கையின் படி, நீங்கள் நடந்துகொள்கிறீர்களா? என்பதாகும். இந்த கொள்கையின் அடிப்படையில் பாகிஸ்தானிய அமீர் மஸ்ஊத் என்பவர் யாருக்கு பைஅத் செய்திருந்தார் என்ற கேள்வியை நான் அவர்கள் முன் வைத்தேன். அதற்கு அவர்கள் அளித்த பதிலைக் கீழே பதிந்துள்ளேன். //அழிந்துபோன ஜமாஅதுல் முஸ்லிமீனை மீண்டும் தோற்றுவிக்கும் தலைவர் எவரிடமும் பைஅத் செய்வதில்லை, என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவாகும். இந்த உம்மத்தின் முதலாவது ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்தபோது பிறரிடம் பைஅத் செய்யாத ஒரு தலைவரைக் கொண்டே அல்லாஹ் அதனைத் தோற்றுவித்தான்// (ஜ.முஸ்ளிமீன்) //ஜமாஅதுல் முஸ்லிமீனைத்’ தோற்றுவிப்பவர்கள் எவருக்கும் பைஅத் செய்வதில்லை எனும் இந்த ஸுன்னாவிற்கு ஏற்ப இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்த அல்குர்ஆன் விரிவுரையாளர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் எவருக்கும் பைஅத் செய்யவில்லை. மாறாக அறிஞர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பின்பற்றி, இஸ்லாத்தை ஏற்பவர்களிடம் இஸ்லாத்திற்காக பைஅத் எடுத்தார்கள்.//(இது அவர்களது வாசகம்) //அழிந்துபோன ஜமாஅதுல் முஸ்லிமீனை மீண்டும் தோற்றுவிக்கும் தலைவர் எவரிடமும் பைஅத் செய்வதில்லை, என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவாகும். இந்த உம்மத்தின் முதலாவது ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்தபோது பிறரிடம் பைஅத் செய்யாத ஒரு தலைவரைக் கொண்டே அல்லாஹ் அதனைத் தோற்றுவித்தான். // (இது அவர்களது வாசகம்) சகோதரர்களே! அவர்களின் பதிலிளிருந்து சில வாசகங்களைத் தருகிறேன். //அழிந்துபோன ஜமாஅதுல் முஸ்லிமீனை மீண்டும் தோற்றுவிக்கும் தலைவர் எவரிடமும் பைஅத் செய்வதில்லை, என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவாகும்.// மேலுள்ள வாசகத்தில், முக்கியமான இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளது. 1. இவர்களுடைய அமீர், மஸ்ஊத் யாருக்கும் பைஅத் செய்யவில்லை என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2. இது ரசூலுல்லாஹ்வின் சுன்னாவாகும். இபோது இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள “இது ரசூலுல்லாஹ்வின் சுன்னாவாகும்.” என்ற அம்சத்தை சற்று விரிவாகப் பார்ப்போம். இவர்கள் என்ன சொல்கின்றார்கள்? அவர்களுடைய அமீர் பைஅத் செய்யவில்லைதானாம். அதற்குக் காரணம் ரசூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடந்துள்ளாராம். இவர் ரசூல் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட முன்மாதிரி என்ன தெரியுமா? ரசூல் (ஸல்) அவர்கள் யாருக்கும் பைஅத் செய்யவில்லையாம். அதே மாதிரியாக இவர்களுடைய அமீரும் பைஅத் செய்யவேண்டியதில்லை என்பதுதான் இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரமாகும். அடுத்தபடியாக அதற்குக் காரணம் கூறுகின்றார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஜமாஅத் இல்லாத நேரத்தில், அந்த ஜமாஅத்தை புதிதாக ஏற்படுத்துவதற்கு வந்தார்களாம். இதன் காரணமாக அவர்கள் யாரிடமும் போய் பைஅத் செய்யவில்லையாம். இதே மாதிரியாக இவர்களுடைய அமீரும், இஸ்லாமிய ஜமாஅத் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில், புதிதாக இஸ்லாமிய ஜமாஅத்தை உருவாக்க வந்தாராம். எனவே ரசூல் (ஸல்) அவர்களைப் பின்பற்றி யாருக்கும் பைஅத் செய்யவேண்டிய அவசியமில்லை என்கின்றார் இந்த உமர் அலி. ஆதாரத்தை தயாரித்துக்கொள்வதற்கு இந்த உமர் அலி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். சகோதரர்களே! இவர்கள் எடுத்து வைக்கும் நச்சுக் கருத்தை பார்த்தீர்களா? ரசூல் (ஸல்) அவர்கள் பைஅத் செய்யாமல் இருந்தது, புதிதாக ஒரு ஜமாஅத் ஒன்றை உருவாக்க வந்ததினால்தான் என்று ரசூல் (ஸல்) அவர்களின், நபித்துவத்தை கொச்சைப் படுத்தியுள்ளார்கள். ரசூல் (ஸல்) அவர்கள், இன்னொருவரிடம் போய் பைஅத் செய்யாமல் இருந்தது புதிதாக ஜமாஅத்தை உருவாக்க வந்ததினாலேயா? நஊதுபில்லாஹ். இவர்கள் யாரைப் பற்றி கதைக்கின்றார்கள் என்பதைக் கூட மறந்துவிட்டார்கள் போலும். கடைசி உம்மத்தான இந்த உம்மத்திற்கு அனுப்பட்ட நபியைப் பற்றி கதைக்கின்றோம் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். சகோதரர்களே! ரசூல் (ஸல்) அவர்கள், அடுத்தவர்களிடத்தில் போய் பைஅத் செய்யாமல் இருந்தது, இவர்கள் சொல்கின்ற மாதிரி இல்லாமல் அவர் ஒரு நபி என்ற ஒரே காரணத்தினால்தான். நபி இன்னொருவரிடம் போய் பைஅத் செய்வாரா? இப்படி செய்தால் அவருடைய நபிப்பட்டத்தின் கெளரவம் என்ன ஆகிவிடும்? தன்னுடைய அமீர் பைஅத் செய்திருந்தார் எனக் காட்டுவதற்கு எந்த ஆதாரமில்லாத போது, இந்த அமீர் பைஅத் செய்யாமல் இருப்பதற்கு ஆதாரம் என்னவென்று இந்த உமர் அலி தேடி அளைந்திருக்கிறார். கடைசியில் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், இந்த மஸ்ஊத் என்பவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டார். அதுதான் புதிதாக ஜமாஅத்தை உருவாகுக்வது. சகோதர்களே! முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு நபியாக அனுப்பட்டவர்கள். அவர்கள் யாரிடமும் பைஅத் செய்யமாட்டார்கள். அதற்குக் காரணம் புதிதாக ஜமாஅத்தை உருவாக்க வந்ததல்ல. அதற்குக் காரணம் அவர்கள் இந்த உம்மத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள். ரசூல் (ஸல்) அவர்கள், யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த உம்மத்திலுள்ளவர்கள்தான் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும். காரணம் அவர்கள் நபியாகிறார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் யாரையும் பின்பற்ற மாட்டார்கள். மற்றவர்கள்தான் அவரைப் பின்பற்றவேண்டும். காரணம் அவர்கள் நபியாகின்றார்கள். அதே போல் தன்னிடம் வந்து பைஅத் செய்யுமாறு ரசூல் (ஸல்) அவர்களுக்கு அழைப்பு விடுவதற்கு இந்த உம்மத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. ரசூல் (ஸல்) அவர்கள்தான் மற்றவர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். இவைகளெல்லாம் ஒரு நபிக்குறிய தனிச் சிறப்பாகும். நபிக்குரிய இந்த சிறப்பை பாகிஸ்தானிய மனிதருக்குக் கொடுக்கக் கூடாது என்பது உமர் அளியிட்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் இந்த விடயத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக ஜமாஅத்தை உருவாக்குவது என்ற காரணத்தை முற்படுத்தி, ரசூல் (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்பை மூடி மறைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அதே போல் இன்னுமொரு நச்சுக் கருத்தைப் பாருங்கள்! இந்த மஸ்ஊத் என்பவர் ஜ.முஸ்ளிமீனின் கொள்கைப் படி பைஅத் செய்யாத காரணத்தினால் அவர் முஸ்லிம் அல்லாதவர் ஆகின்றார். இப்படியான ஒரு நிலைமை ரசூல் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டதா? நஊதுபில்லாஹ். ரசூல் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு நபியாக அனுப்பப்படும்போது முஸ்ளிமாகத்தான் அனுப்பப்பட்டார்கள். பைஅத் செய்தால்தான் முஸ்லிம் என்ற நிலை, வழிகேட்டுக் கொள்கையை விதைத்தவரான மஸ்ஊத் என்பவருக்குத்தான் ஏற்பட்டது. கீழுள்ள ஹதீஸைப் பாருங்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தௌராத்தின் ஒரு பகுதியைக் கொண்டு வந்து இறைத்தூதர் அவர்களே! இது தௌராத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். நபி (ஸல்)அவர்கள் பேசாதிருந்தார்கள். உமர்( ரலி) அவர்களோ அதைப் படிக்கத் துவங்கினார்கள். நபி(ஸல்) அவர்களின் முகமோ (கோபத்தால்) மாறத் தொடங்கியது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்மைக் கஷ்டங்கள் (வந்து) அடையட்டும் நீர் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்க்க வில்லையா? என்று கேட்டார்கள், நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனுடைய தூதரின் கோபத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த முஹம்மதின் உயிரை கையில் வைத்திருப்பவனின் மீது சத்தியமாக மூஸா (அலை) உங்களிடையே வந்து என்னை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் நேர் வழியை விட்டும் (விலகிப்) போய்விடுவீர்கள். மூஸா (அலை) உயிருடன் இருந்து என்னை நபியாக அவர் அடைந்தால் அவர் என்னைத்தான் நிச்சயமாகப் பின்பற்றியிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) தாரமி பாருங்கள் சகோதரர்களே! மூஸா (அலை) கூட ரசூல் (ஸல்) அவர்களை நபியாக அடைந்திருந்தால், ரசூல் (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றியிருப்பார் என ஹதீஸில் உள்ளது. நபியொருவருக்கே இந்த நிலைமை என்றால், உம்மத்தவர்களின் நிலை என்ன? ரசூல் (ஸல்) அவர்கள் தனக்கு பைஅத் செய்யுமாறு உம்மத்தினருக்குக் கட்டளையிட்டால், ரசூல் (ஸல்) அவர்களுக்கு பைஅத் செய்வது தவிர இந்த உம்மத்தினருக்கு வேறு வழியில்லை. காரணம் அவர்கள் இந்த உம்மத்தின் நபியாகின்றார்கள். ஒரு பைஅத் செய்த சமூகம் இருந்தாலும், அவர்களும் இந்த நபிக்குத்தான் பைஅத் செய்யவேண்டும். தனது கொள்கைப் படி, தன்னுடைய அமீரை ஒரு முஸ்லிம் என்று நிரூபிப்பதற்காக உமர் அலி இப்படி ஒரு சதித் திட்டம் தீட்டியுள்ளார். இவருடைய திட்டம் யகூதிகளுடைய திட்டத்தையும் மிஞ்சிவிட்டது. சகோதர்களே! இந்த உமர் அலி, சிந்தனைக் கோளாறு உள்ளவர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. அது மட்டுமல்லாமல் இவர்கள் எடுத்து வைக்கும் வாதமான, பைஅத் செய்தால்தான் ஒரு முஸ்லிமாக முடியும் என்ற வாதத்தின் படி இவர்களுடைய அமீர் கூட முஸ்லிமாக இல்லை. ஐயோ! பரிதாபம், போயும் போயும் இவர்கள், தங்களது கொள்கைப் படி முஸ்லிம் அல்லாத ஒருவருக்கே பைஅத் செய்துள்ளார்கள். ஓ! முகல்லித் இபாமே! நீர் ஒரு முகல்லித் என்பதை நான் தெளிவாக நிரூபித்து விட்டேன். அதே போல் நாங்கள் முஸ்லிம்கள் என்பதையும் நிரூபித்து விட்டேன். அதே போல் நீங்கள் இருவரும் இஸ்லாமிய உம்மத்தின் நவீன கால பித்னாக்காரர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் நிரூபித்துவிட்டேன். அல்ஹம்து லில்லாஹ். எல்லா மனிதர்களையும் காபிராக்கிய உமது தற்போது நிலை என்ன? “ஜமாஅதுல் முஸ்லிமீன்” என்ற பெயரை விட இவர்களுக்குப் பொருத்தமான பெயர் “ஜமாஅதுல் முஜ்ரிமீன்” என்பதாகும். ஒருவர் தன்னுடைய பெயரை “அப்துல்லாஹ்” என்று வைத்துக்கொண்ட காரணத்தினால், நான் அல்லாஹ்வின் அடிமை. எனவே நான் சொர்க்கம் செல்வேன் என வாதிட முடியாது. பகரமாக தான் அல்லாஹ்வின் அடிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும். வேறொருவருக்கு அடிமையாக இருந்து கொண்டு, நான் சொர்க்கம் செல்வேன் என்றால் நியாயமாகுமா? இதே நிலைதான் இவர்களுடைய நிலைமையும். அடுத்த ஆதாரம், இன்ஷா அல்லாஹ் அடுத்த
கட்டுரையில்.

0 comments:

Post a Comment

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook

Blog Archive