NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Wednesday, December 29, 2010

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

Posted by Rikaz Network Inc. 9:28 AM, under | No comments


ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை

Tuesday, December 28, 2010

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?

Posted by Rikaz Network Inc. 6:58 AM, under | No comments

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?
 
கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு

FACE BOOK!!!! HARAM...????? OR HALAL??????

Posted by Rikaz Network Inc. 6:31 AM, under | No comments

பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK
FACEBOOKகில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை தங்கள் நண்பர்களுக்கு பலர் அனுப்புவது கிடையாது. ஏன் என்றால் அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது. இதனால் நாங்கள் அனுப்புவதில்லை என்கின்றனர். சரி அவர்கள் பார்கவில்லை என்றாலும் அனுப்புவது நம் கடமை ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட கூறினார்கள். ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை. ஆனால் பலர் நல்ல விடயங்களை அனுப்பது கிடையாது. அசிங்கமான சினிமா பாடல்கள்அருவருப்பான படங்களை எல்லாம் Tag பண்ணுகிறார்கள் இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் அறிவதில்லை. பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK

Saturday, December 25, 2010

முதலாவது ஆதாரம்

Posted by Rikaz Network Inc. 12:03 AM, under | No comments




முதலாவது ஆதாரம்
உமர் அலிக்கு பைஅத் செய்யாதவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதையும், உமர் அலி, இபாம் போன்றவர்கள் இந்த இஸ்லாமிய உம்மத்தில் குழப்பம் விளைவிக்கின்றார்கள், இவர்கள் பித்னாக்காரர்கள்தான் என்பதையும் உண்மைப் படுத்தும் முதலாவது ஆதாரம். (ஆதாரம் -1) முதலாவதாக நான், ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சகோதரர்களே! இந்த பைஅத் தொடர்பாக வந்திருக்கும் ஹதீஸ்களை நாங்கள் ஒரு போதும் மறுக்க வில்லை. ஒரு முஸ்லிம் ஒருக்காலும் சஹீஹான ஹதீஸ்களை மறுக்கக்கூடாது

Friday, December 24, 2010

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான்.

Posted by Rikaz Network Inc. 11:50 PM, under | No comments

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன்
வடிகட்டிய முனாஃபிக் ஆவான்.

அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம்
இருந்து கொண்டே இருக்கும்.

நம்பினால் துரோகம் செய்வான்;

பேசினால் பொய்யே பேசுவான்;

ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;

விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'

! (இறைத்தூதர் (ஸல்)_அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)_புகாரி-34

எவர்கள் ஈமான் கொண்டவர்களிடையில் இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ,

அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

-இறைவேதம் (24:19

நிச்சயமாக, அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்;

அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக்
கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.

-இறைவேதம் (2:169)


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்:

“நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள் ...

அவளுடைய செல்வத்திற்காக,

அவளுடைய குலச் சிறப்புக்காக,

அவளுடைய அழகுக்காக,

அவளுடைய மார்க்கப்பற்றுக்காக !

நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,

உமக்கு நலம் உண்டாகட்டும்!”

! (அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (புகாரி, முஸ்லிம்


மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்!

Posted by Rikaz Network Inc. 11:42 PM, under | No comments


மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்!

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில்
மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள் ...

1.சதக்கத்துல் ஜாரியா

2.பலன் தரும் கல்வி

3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும்
நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
"இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்ட...ும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்
832.
ஆயிஷா(ரலி)
ஸஹீஹுல் புகாரி

Read more Click On nusrik


அனைவருக்கும் எமது புத்தாண்டு 1432-வாழ்த்துகள்

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life,
you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

Friday, December 10, 2010

ஆசுரா தினம் பற்றிய ஒரு அறிவுறை

Posted by Rikaz Network Inc. 9:35 PM, under | No comments


காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள்                    

Tuesday, December 7, 2010

அனைவருக்கும் எமது புத்தாண்டு 1432-வாழ்த்துகள்- 1432

Posted by Rikaz Network Inc. 1:06 PM, under | No comments

முஹர்ரம் புத்தாண்டு பிறக்கின்றது. ஹிஜ்ரி 1431 கழிந்து 1432 பிறக்கின்றது. முஸ்லிம்

உம்மாவின் முஹர்ரம் ஆண்டின் முதல் மாதம் ஆரம்பித்துள்ளது, எமக்கு இது ஹிஜ்ரத்தை நினைவுபடுத்துகிறது. இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாம் உயர்வு பெற்று வளர காரணமாக இருந்த ஹிஜ்ரத்தை ‘தியாக பயணம் ‘ அடிப்பதியாக கொண்டு முஹர்ரம் ஹிஜ்ரத் ஆண்டின் முதல் மாதமாக அமைக்கப்பட்டுள்ளது – அனைவருக்கும் எமது புத்தாண்டு 1432-வாழ்த்துகள்- 1432 AH- 6 December 2010



உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக nusrik@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Read more Click On nusrik


அனைவருக்கும் எமது புத்தாண்டு 1432-வாழ்த்துகள்

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life,
you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

Monday, December 6, 2010

நீங்களும் பேஸ்புக்கில்

Posted by Rikaz Network Inc. 5:33 AM, under | No comments

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.

'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும் :-

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர் :-

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம் :-

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள் :-

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :-

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள் :-

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம் :-

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள் :-

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.



ஈமானுக்கு சோதனையான காலம் இது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது,முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.இது அல்லாஹ்வின் வாக்கு.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம்,மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்

உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக nusrik@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Read more Click On nusrik



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life,
you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

Sunday, December 5, 2010

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்

Posted by Rikaz Network Inc. 12:56 AM, under | No comments


ஹிஜ்ரத்- நபி(ஸல்…) அவர்களும் அவர்களுடைய உற்றத் தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட ஒரு பூமியைத்தேடி புறப்பட்டு இன்றோடு 1432 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்…)அவர்கள் எந்த நோக்கத்திற்காக மதீனாவை நோக்கிச்சென்றார்களோ அந்த இலட்சியமும் நோக்கமும் இன்றைக்கும் முஸ்லிம் சமூகம் உணராதது வேதனைக்குரிய ஒன்று.

கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கும் களியாட்டங்கள் போடுவதற்கும் பயன்படுத்துவதைபோல நமது புத்தாண்டு வருவதில்லை. இஸ்லாமிய ஆண்டை எந்த நிகழ்விலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பாக உமர்(ரலி…) அவர்களுடைய காலத்தில் கலந்தாலோசனை நடைபெற்றபொழுது அவர்கள் தேர்வுச்செய்தது ஹிஜ்ரத் என்ற மாபெரும் நிகழ்வையே.

ஹிஜ்ரத் என்பது ஏதோ உயிரை காப்பாற்றுவதற்காக தமது இருப்பிடத்தை விட்டு ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை மேற்க்கொண்டது அல்ல. இன்றும் பல்வேறு வகையான புலம்பெயர்வுகள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காக அதுவும் தன்னைப்படைத்த இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்ட இவ்வுலகில் நடைபெற்ற மாபெரும் புலம்பெயர்வுதான் ஹிஜ்ரத்.

இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அதனை தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டு அடியொற்றி நடக்க ஒரு சமூகம் தேவை என்ற நோக்கத்திற்காகத் தான் மக்காவை விட்டும் மதீனாவிற்கு தனது வசிப்பிடம், சொந்தங்கள், செல்வங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதீனாவை நோக்கிப்புறப்பட்டார்கள் நபி(ஸல்…) அவர்களின் தலைமையில் அந்த லட்சிய வீரர்கள்.

எந்த லட்சியத்திற்காக ஹிஜ்ரத் மேற்க்கொள்ளப்பட்டதோ அந்த லட்சியம் நிறைவேறவும் செய்தது. அந்த ஹிஜ்ரத்திலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது. ஆனால் அதற்கு பக்கங்கள் போதாது. தற்போதைய நமது சமுதாயத்தின் நிலை என்ன?, கேவலம் ஆங்கிலப் புத்தாண்டையும், தமிழ் புத்தாண்டையும் அறிந்திருக்கும் நம்மவர்கள் ஹிஜ்ரி ஆண்டையோ அல்லது அதன் மாதத்தையோ பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

நோன்பு நோற்கும்பொழுது ரமலான் என்றுத் தெரிகிறது. தியாகப்பெருநாள் கொண்டாடும்பொழுது துல்ஹஜ் மாதம் என்று தெரிகிறதேயொழிய இஸ்லாமிய ஆண்டைப்பற்றிய போதிய அறிவும் அதில் கிடைக்கும் படிப்பினைகளும் இல்லாமலேயே நம்மில் பெரும்பகுதியினர் உள்ளோம்.

ஆங்கில ஆண்டை நம்மீது திணித்து விட்டார்கள் இஸ்லாத்தின் எதிரிகள். அதனுடைய வாரக்கிழமைகளின் பெயரை சிந்தித்துப் பார்த்தால் தெரியும் அந்த 7 தினங்களின் பெயர்களும் ரோமர்கள் வணங்கி வந்த கடவுள்களின் பெயர்கள். இன்று இந்தக்கலாச்சாரம் நமது வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது.

உலகளாவிய அளவிலான ஹிஜ்ரா காலண்டரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இல்லை. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் செல்வ வளங்கள் இருந்தும் முஸ்லிம்கள் புழங்குவதற்கு ஒரு இஸ்லாமிய காலண்டரை நம்மால் ஏன் உருவாக்க இயலவில்லை. பிறையை கணக்கிடுவதிலேயே நம்மிடையே பல்வேறுவிதமான சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தான் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான முடிவுகளை நம்மால் எடுக்க இயலவில்லை.

நபி(ஸல்…)அவர்கள் ஹிஜ்ரத்தின் ஊடே கட்டியெழுப்பிய அந்த சமூகம் காணாமல் போய்விட்டது. ஹிஜ்ரத்தின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை பெறவேண்டும்.

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய மாவீரன் மால்கம் X கூறிய கூற்று இங்கு நினைவுக்கூறத்தக்கது "தனது சொந்தவரலாற்றை மறந்த சமுதாயத்தால் வரலாறு படைக்க இயலாது". ஆகவே மீண்டும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அந்த ஹிஜ்ரத்திலிருந்து பாடங்களை பயின்று நமது சமூக வாழ்க்கையில் அதனை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவேண்டும்.

ஹிஜ்ரத்தின் வரலாற்றை படித்து முடித்து விட்டு புத்தக அலமாரியில் பாதுகாக்காமல் அதனை செயல்களத்திற்கு கொண்டுவர நம் அனைவருக்கும் வல்ல இறைவனாகிய அல்லாஹ் துணைபுரிவானாக!

யா அல்லாஹ் இஸ்லாமிய சமூக புனரமைப்பில் எங்களையும் பங்கேற்கசெய்வாயாக! அந்த சமூகம் விரைவில் இவ்வுலகில் புலர்வதற்கு நீ துணைபுரிவாயாக! ஆமீன்!

அனைவருக்கும் பாலைவனத்தூதின் இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

குல்லு ஆம் வ அன்தும் பி ஹைர்.

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.


Read more Click On
nusrik



Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook

Blog Archive