Read More Click on Nusrik Home
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ...
இமாம் ஷாFபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘அல்குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்றுங்கள். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எந்த நபரின் சொல்லும் மார்க்கத்திற்கு ஆதாரம் கிடையாது.
யாரையும் கண்மூடிப்பின்பற்றாதீர்கள்.’
(நூல்: ஸலாத்துந்நபி பக்கம் 21)
’எனது நூலில் அழ்ழாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான(சட்டத்)தைக் கண்டால் அழ்ழாஹ் வின் தூதழ்(ஸல்) அவர்களின் வழிமுறையையே (மக்க ளிடம்) சொல்லுங்கள். என் சொல்லை விட்டு விடுங்கள்.’
(நூல்: அல்மஜ்முவு (நவவி) பாகம்-01, பக்கம்-63)
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘ஒவ்வொரு புதிய வி’யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும்.
எங்களை கண்மூடிப்பின்பற் றாதீர்கள்.
அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’
(நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )
‘அழ்ழாஹ்வுடைய வேதத்திற்கும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள்.
அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’
(நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)
‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’
(நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)
‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை (நபிமொழி யை)யே பின்பற்றுங்கள்.’
(நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன்.
எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’
(நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62)
இமாம் அஹ்மது இப்னு ஹன்Bபல்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள்.
யார் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்று கின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’
(நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302)
‘என்னையோ, மாலிக், ‘ஷாபிஈ, அவ்ஸாயி, ஸவ்ரி போன்ற இமாம்களையோ பின்பற்றாதீர்கள்.
அவர்கள் புரிந்து கொண்டதி (அல்குர்ஆன், அல்ஹதீஸ்)லிருந்து நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்!’
(நூல்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 113)
Read More Click on Nusrik Home
அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
Monday, November 22, 2010
கண்ணியமிக்க இமாம்களின் கண்டிப்பான அறிவுரைகள் !
Posted by Rikaz Network Inc.
10:19 AM, under | No comments
0 comments:
Post a Comment