காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா
அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
Tuesday, October 12, 2010
காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா
Posted by Rikaz Network Inc.
11:59 PM, under | No comments
காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா
பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். காலையிலும்மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை சலவாத் ஓதினால்ஷபாஅத் கிடைக்கும் என்று. இது சரியான ஹதீஸா
ஆர்.என்
பதில் :
காலையிலும் மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால்நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும்இல்லை.
ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லவேண்டும். இதற்குப் பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச்செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும்என்று பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தெரிவிக்கின்றது.
577حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ رواه مسلم
நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர்கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது "ஸலவாத்'சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோஅதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான்.பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பதுசொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில்ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்கவிரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
நூல் முஸ்லிம் (628)

0 comments:
Post a Comment