NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Sunday, December 5, 2010

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.

Posted by Rikaz Network Inc. 12:52 AM, under | No comments

"

இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவ

றியோர் வழியுமல்ல. (1:5-7).

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்...) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:127-128). “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (2:201). “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. (2:250). எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”.(2:285). “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286).

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (3:8).

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (3:16).

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (3:16).

“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (3:38).

“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”(3:53).

“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. (3:147).


கணவன் விரும்பாத பண்புகள்

Posted by Rikaz Network Inc. 12:48 AM, under | No comments


குடும்ப வாழ்க்கை என்பது கணவன், மனைவி இருவருக்கு மிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது. இப்புரிந்துணர்வு அற்றுப் போகும்போது உறவிலே பாதிப்புகள் ஏற்படும். ஒரு மனைவி கொண்டிருக்க வேண்டிய பண்புகளை அவள் கொண்டிராதபோது கணவன் வெறுப்படைகின்றான். அதேபோன்று ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை அவன் கொண்டிராதபோது மனைவி வெறுப்படைகிறாள். இந்நிலைமைகைளினால் குடும்ப வாழ்வு சீர்குலைந்துவிடுகிறது.

ஒரு மனைவியிடம் இருக்கக் கூடாத சில பண்புகளை நோக்குவோம். இப்பண்புகளை எந்தவொரு கணவனும் விரும்பமாட்டான். இப்பண்புகளை கொண்டிருக்கின்ற மனைவிமார்கள் தம்மை சுயவிசாரணை செய்து கொள்ளட்டும்.

1. அதிகாரம் செலுத்தும் மனைவி:

இவள் கணவன் இருக்கின்றான் என்பதையே பொருட்படுத்தமாட்டாள். குடும்ப விடயங்களிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ அவனது ஆலோசனையைக் கேட்கமாட்டாள். தனது விருப்பப்படி செயற்படுவாள். இத்தகைய பெண் மீது கணவன் வெறுப்படைவான்.

2. பொய் சொல்லும் மனைவி:

சில பெண்கள் இயல்பாக பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், குடும்ப வாழ்வின் அடிப்படை உண்மையை பேசுவதாகும். குறிப்பாக கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பொய் கலந்துவிடக்கூடாது. குடும்ப வாழ்வின் மகிழ்ச்சி உண்மை பேசுவதிலே தங்கியிருக்கின்றது. எனவே, பொய் பேசும் பழக்கமுடைய பெண்கள் அதனை விட்டுவிடுவது குடும்ப வாழ்வின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்.

3. பிடிவாதமுள்ள மனைவி:

இவள் எப்பொழுதும் எந்த விடயத்திலும் பிடிவாதம் கொண்டவளாக இருப்பாள். அவளது கருத்து பிழையாக இருந்தாலும் கூட அவள் தனது பிடிவாதத்தைக் கைவிடமாட்டாள். இதனால், கணவனுக்கு அவளின்மீது வெறுப்பு ஏற்படும். இவள் எத்தகைய நல்ல விடயங்களை செய்தாலும் கணவனிடத்தில் அவற்றுக்கு பெறுமதி இருக்காது.

4. தனித்து போகும் மனைவி:

இவள் எல்லாவிடயங்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பாள். தனது பணிகளை மாத்திரம் செய்து கொள்வாள். தனிமையில் இருப்பது அவளுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இது சில வேளை, மனநோயாகக் கூட இருக்கலாம்.

5. உறவாடத்தெரியாத மனைவி:

இவள் கணவனுடனும் ஏனையவர்களுடனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியாதிருப்பாள். இவளால் அடிக்கடி குடும்பத்திற்குள்ளால் முரண்பாடுகள் ஏற்படும். இவள் அதிகமான பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பாள்.

6. எதிர்மறை சிந்தனையுள்ள மனைவி:

இவள் எப்பொழுதும் எந்த விடயத்தையும் எதிராகவே பார்க் கக் கூடியவளாக இருப்பாள். இதனால் சில நல்ல விடயங்கள் கூட நிகழாது போகலாம்.

குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்கு கணவன் மனைவி இருவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது முரண்பாடுகள் ஏற்படுவதும் அது விவாகரத்துவரை சென்று விடுவதும் தவிர்க்க முடியாததாகும். எனவே, கணவன் மனைவி இருவரும் தமது செயற்பாடு களை, நடத்தைகளை மீள்பரி சோதனை செய்துகொள்ள வேண்டும்

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life,
you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

Read more Click On nusrik



Saturday, December 4, 2010

அஸ்ஸலமு அலைக்கும் நண்பர்களே!!!!!

Posted by Rikaz Network Inc. 10:45 PM, under | No comments


ஆம் . Rikaz Network inc. in மற்றும் ஒரு சேவையாக முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி. இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இத்தளத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் சரியாக விளங்கிக் கற்பதற்கு இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

ஆம் உங்களுக்கு உடனுக்குடன் பயிற்சியை பெற்றுக் கொள்ள E-mail மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது எமது Toolbar ஐ download பன்னிக் கொள்ளுங்கள்
nusrik Toolbar download Click here

எங்களுடய அன்பான வாசகர்களுக்கு Rikaz network inc. in நன்றிகள்.

Friday, November 26, 2010

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

Posted by Rikaz Network Inc. 1:29 PM, under | No comments


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்


Read more Click On nusrik



இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

Posted by Rikaz Network Inc. 1:25 PM, under | No comments

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.


Read more Click On nusrik



autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine

Posted by Rikaz Network Inc. 1:23 PM, under | No comments

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.

பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.


Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook