NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Monday, November 8, 2010

அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு

Posted by Rikaz Network Inc. 9:03 AM, under | No comments



ஷேக் சாஹிப் என்பவர் பிரான்ஸ் நாட்டு பிகால்(Pegal) நகர உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதில் அவர் உணவுப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் துறையில் பணிபுரிவதால் உணவு மற்றும் மருந்துப்பொருட்களின் தரத்தைப் பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த நிறுவனமும் அவர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முன்னதாக அது உணவுப் பொருளாயினும் சரி மருந்துப்பொருளாயினும் சரி அதனைச் சோதனைக்குட்படுத்திய பின்பே சந்தைப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் மருந்து மற்றும் உணவுகளின் கலவையை (Ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையம் அங்கீகாரம் அளித்தபின்பு மட்டுமே அவை விற்பனைக்கு வரும். உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் உணவுப்பொருட்களைப் பிரித்து அதன் கலவையை ஆய்வுசெய்வார்கள். இக்கலைவைகளில் சிலவற்றுக்கு அறிவியல் பெயர்களையும் குறிப்பார்கள். சிலவற்றைக் குறியீடுகளைக் கொண்டும் குறிப்பார்கள். இக்குறியீடுகள்தாம் E-904, E-141 என பாவனையிலுள்ளன.

இவ்வாறு ஷேக் சாஹிப் அவர்கள் பொடுருட்களைச் சோதனைசெய்து கொண்டிருக்கும்போது சில கலவைகள் குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டார். அதற்கு உமக்குக்கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள். வேறு கேள்விகள் கேட்கவேண்டாம்என்ற மிரட்டலுடன் கூடிய பதில்தான் அவருக்குக் கிடைத்தது. இவர்களது இப்பதில் ஷேக் சாஹிபிற்கு சந்தேகக் கணைகளைக் கிளப்பியது. ஆதனைத் தொடர்ந்து இவ்விடயத்தில் அவர் தீவிரமாகச் செயற்பட்டார். அப்போது அந்நிறுவனத்தின் சில கோப்புகளைப் படிக்க நேர்ந்தது. அதில் உலக முஸ்லிம்கள் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைக் கண்டு திகைத்தார்.
பொதுவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வகை மாமிச உணவு பன்றியாகும். எனவேதான் பலவகையிலான பன்றிகளைப் பறாமறிக்கும் பன்றிப் பண்ணைகள் அந்நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிரான்ஸில் மாத்திரம் இதுபோன்ற 42ää000 இற்கும் அதிகமான பன்றிப் பண்ணைகள் காணப்படுகின்றன. ஏனைய விலங்கினங்கைளக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு காணப்படுகின்றது. எனவே பன்றியை விரும்பி உண்ணும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பன்றியிலுள்ள கொழுப்பை நீக்கவே விரும்புகின்றனர்.

இந்நிலையில் பன்றியிலிருந்து நீக்கப்படும் பொரும்பாலான கொழுப்பு எங்கு செல்கிறது? என்பதுதான் கேள்வி.

உணவுத்தரக் கட்டுப்பாட்டு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுக்கப்பட்ட பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட அதிகமான கொழுப்புகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்பகாலங்களில் இதனை முறையாக எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்விதப் பயன்பாடும் இல்லை. எனவே இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என சிந்திக்கத்துவங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக்கொண்டு முதல்கட்டச் சோதனையாக சவர்க்காரங்களைத் தயாரித்துப் பார்த்தனர். இம்முயற்சி அவர்களுக்குப் பயன்கொடுத்தது. இதனைத தொடர்ந்து முழுவீச்சில் இப்பன்றிக் கொழுப்பு பல வேதியியல் நொதியப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு சந்தைப்படுத்தப்பட்டது.

பல்வேறு காரணிகளுக்காக பல உற்பத்தி நிறுவனங்களும் இதனை வெகுவாக வாங்கத்துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப்பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள்,கொஸ்மெடிக் பொருட்கள் (சவர்க்காரம், செம்பூ, முகக் க்ரீம்கள்...) மற்றும் மருந்துப்பொருட்கள் என அனைத்தினதும் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகள் கண்டிப்பாகக் குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதைப் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக்கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாகப் பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப்பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு என்று எழுதுவதற்குப் பதிலாக விலங்குகள் கொழுப்பு (யுniஅயடள குயவ) என எழுத ஆரம்பித்தனர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்புகள் அடங்கிய பொருட்களை சந்தைப்படுத்த அனுமதிவேண்டினர். விலங்குளின் கொழுப்பு என்றபெயரில் ஐரோப்பிய நாடுகள் அனுமதிகேட்டபோது அது எவ்வகையானவிலங்குகளின் கொழுப்பு எனக்கேட்டதற்கு ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குளின் கொழுப்பு என்று பொய்கூறினர். மீண்டும் ஒரு கேள்வி எழும்பியது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு என்றாலும் அவை முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படுவதில்லை. இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும் முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள்மீது தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. 1970 களிலிருந்து ஐரோப்பயி நாடுகளில் வசித்துவருவோருக்கு இந்த உண்மை தெரியாததல்ல.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் பெரும் பெரும் ஐரோப்பிய உற்பத்தி நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைத்துக்கொண்டிருந்த 75% வருவாயை அவர்கள் இழந்தனர். இந்த75% என்பது பல பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.
இதன்முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்று எழுதுவதையும் தவிர்த்து குறியீட்டு மொமி முறையொன்றைக் (Coding Language System) கொண்டுவந்தனர். குறியீட்டு முறையானது உணவுத்தரக்கட்டுப்பாட்டுத் துறையின் நிர்வாகத்துக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள்(E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை,ஷேவிங் க்ரீம், சிவிங்கம்ä, சொக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், டொஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லாப் பொருட்களிலும் இந்த வகையான கலவைகளைக் கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருத்துவப்பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்சொய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும் பயன்படுத்துவதாலும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்ள் உருவாகுதல்ää வன்முறை எண்ணங்கள் வளர்தல் போன்ற பல குணவியல்புகளை தங்களையறியாமலேயே மனிதனிடம் ஏற்படுத்திவிடக்கூடிய இயல்பு பன்றிக்கொழுப்பில் காணப்படுகின்றது என்பது மற்றுமொரு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் யாதெனில் ஒவ்வொரு மனிதனும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் கீழ்க்கண்ட கலவைக் குறியீடுகள் E-INGREDIENTS இருக்கின்றனவா என சற்று அலசிப்பார்த்து அவ்வாறு காணக்கிடைத்தால் அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவை. இதுபோன்ற பாவனைப் பொருட்கள் கூட பன்றிக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

1. சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட பண்டங்கள் :

E103-E105-E111-E217-E239-E330-E121-E125-E126-E127-E130-E152-E181-E211-E212-E213-E214-E215

2. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பண்டங்கள் :

E102-E123-E124-E131-E142-E210-E211-E212-E213-E214-E215-E217-E220-E239-E251-E330-E311


3. குடல் அலர்ஜிக்குக் காரணமான பண்டங்கள் :

E221-E223-E224-E226

4. சரும நோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பண்டங்கள் :

E230-E231-E232-E233-E311-E312

5. கொலஸ்ரோலை அதிகரிக்கச்செய்வன :

E320-E312-E463-E464-E466


6. அலர்ஜியை ஏற்படுத்துவன :

E338-E339-E340-E341-E407-E450-E461-E462-E463-E465-E466

7. Vitamin B12 ஐ செயலிழக்கச் செய்யும் பண்டங்கள் :

E220

8. புறத்தோலில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியன :

E250-E231-E232-E233-E311-E312

9. பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட உணவுவகைகள் :

E100, E110, E120, E 140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475,E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,E494, E495, E542,E570, E572, E631, E635, E904








10. சிலபோது பன்றிக்கொழுப்பு கலக்காவிடினும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை:

E101-E102-E103-E111-E120-E123-E124-E126-E127-E128-E141-E152-E210-E213-E214-E206-E234-E252-E270-E280-E325-E326-E327-E334-E336-E337-E374-E420-E422-E430-E431-E432-E433-E434-E435-E436-E442-E470-E471-E472-E473-E474-E475-E476-E477-E478-E780-E481-E482-E483-E488-E489-E491-E492-E493-E494-E495-E542-E550-E570-E577-E591-E631-E632-E633-E904



11. சந்தேகத்திற்கிடமான சில பண்டங்கள் :


E104-E122-E141-E150-E153-E171-E173-E180-E240-E214-E477-E151


12. வயிற்று வலியை ஏற்படுத்துபவை :

E226-E224-E223-E211-E221

13. உயர் குருதி அழுத்தத்தை ஏற்படுத்துபவை :

E320-E321-E250-E251-E252


14. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தடைசெய்யப்பட்டுள்ள ஆபத்தான் பண்டங்கள் :

E127-E124-E123-E120-E110-E102

15. தீங்கிழைக்காதவைகள் :

-E132-E140-E160-E161-E163-E170-E174-E175-E200-E201-E202-E203-E236-E237-E238-E260-E261-E262-E263-E281-E282-E300-E301-E302-E303-E304-E305-E306-E307-E308-E309-E322-E331-E332-E333- E335-E400-E401-E402-E403-E404-E405-E405-E406-E408-E410-E411-E413-E414- E421


தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின்மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவையும் உங்கள்மீது (அல்லாஹ்) ஹராமாக்கியுள்ளான் (தடுத்துள்ளான்).

(அல்குர்ஆன்- 2:173)

மரணமும் மண்ணறை வாழ்வும்

Posted by Rikaz Network Inc. 8:49 AM, under | No comments

ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)

இன்று உலகில் காணப்படுகின்ற எந்த மதமாயினும் எந்த இனமாயினும் எக்கலாசாரமாயினும் அவை அனைத்தும் ஒருமித்து உடன்படுமொருவிடயம்தான் மரணம். மரணத்தை யாரும் மறுப்பதில்லை. அவ்வாறே மறுத்தாலும் அது இன, மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பால், குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற பருவங்களையும் தாண்டி, ஆண், பெண் என்ற பால்வித்தியாசங்களையும் மீறி வந்தேதீரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

كل نفس ذائقة الموت “ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியவையே...!(அல்-அன்பியா:35) மற்றுமோர் இடத்தில் لكل امة اجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون “ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவனையுண்டு. அவர்களது தவனை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (யூனுஸ்:49)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்தாலும் மரணம் நிச்சயம் என்பதை மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே!” (அன்னிஸா:78)

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைவைத்துப் பார்க்கும்போது மரணம் என்பது நிச்சயம் என்பதை விளங்கமுடிகிறது. வாழ்கின்றபோது மனிதர்களுக்குரிய கடமையாதெனில் கொடூரமான மரணவேதனையிலிருந்தும் அதன் பின்னுள்ள அகோரமான மண்ணறையின் தீங்குகளிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் பயங்கரமான நரகப்படுகுழியின் தண்டனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தன் உலக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும்.

அவ்வாறு தன் வாழ்வைச் சிறப்புற அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவனது மரணவேதனை இதமானதாகவும் மண்ணறை சுவனப்பூஞ்சோலையாகவும் இறுதி ஒதுங்குமிடம் சதாவும் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர சுவனமாகவும் அமையும்.

அந்தவகையில் நபியவர்கள் கூறிய இரண்டு விதமான மனிதர்களுடைய மரணநிலைபற்றியும் அவர்களது மண்ணறை வாழ்க்கை பற்றியும், பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பிரபலமானதொரு ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். முதலாவது முஃமினான மனிதனின் மரணம். அடுத்து இறை நிறாகரிப்பாளனது மரணம். முதலில் ஒரு முஃமினுடைய மரண நிலைபற்றி அறிந்துகொள்வோம்.

முஃமினின் நிலை
அல்லாஹ் கூறுகின்றான்:
إن الذين قالوا ربنا الله ثم إستقاموا تتنزل عليهم الملئكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون
“எமதிரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்பு (அதில்) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோரது (மரணவேளையில்) வானவர்கள் இறங்கிவந்து மறுமைபற்றி நீங்கள் அச்சங்கொள்ளாதீர்கள். (இவ்வுலகில் விட்டுச்செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகங்கள் பற்றியும்) கவலைகொல்லாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அச்சுவனபதியைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” என்று கூறுவர்.” (ஹாமீம் ஸஜ்தா:30)

பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.

பின்பு இவ்வாறு கூறினார்கள்:

ஒரு முஃமினான அடியான் மரணப்படுக்கையில் இருக்கும்போது சூரியனின் பிரகாசத்தோடும் வெண்நிற முகத்தோடும் “நாஷிதாத்” எனும் மலக்குகள் வானிலிருந்து இறங்கிவருவார்கள். அவர்களிடம் சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கபனும் சுவனத்தின் வாசனைத் திறவியங்களும் இருக்கும். அவ்வானவர்கள் கண்ணெட்டும் தூரம்வரை அவருக்கு முன்னால் வீற்றிருப்பார்கள். பின்பு மலகுல்மௌத் வந்து அவரது தலைப்பகுதியில் அமர்ந்து “ஏ நல்ல ஆன்மாவே...! அல்லாஹ்வின் மன்னிப்பையும் திருப்பொறுத்தத்தையும் பெற்ற நிலையில் வெளியேறு” என்று கூறுவார். ஒரு குவலையிலிருந்து நீர் வடிந்தோடுவதுபோன்று அம்மனிதனின் ஆன்மா அவ்வுடலைவிட்டும் இலகுவான முறையில் வெளியேறும்.
உடனே அம்மலக்குகள் அவ்வான்மாவை சுவனத்து நறுமனங்கமலும் கபன் துணியில்வைத்து எடுத்துக்கொண்டு வானத்திற்கு உயர்ந்து செல்வார்கள். அந்த ஆன்மாவிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக்கொண்டிருக்கும். வானத்தில் சஞ்ஜரித்துக்கொண்டிருக்கும் வேறு மலக்குகள் இம்மலக்குகளைக் கடந்துசெல்லும்போது “எவ்வளவு நறுமணமுள்ள ஆன்மா இது..!!” என்று கூறுவார்கள். அதற்கு அவ்வான்மாவைச் சுமந்துசெல்லும் மலக்குகள் “இது இன்னாரது மகன் இன்னாரது ஆன்மா” என்று உலகில் அவர் எப்பெயர் கூறி அழைக்கப்பட்டாரோ அப்பெயரையே கூறி மற்ற மலக்குகளுக்கு அறிமுகப்படுத்திவைப்பர்.

பின்பு முதல் வானத்தை அடைந்ததும் மலக்குகள் இவருக்காக அவ்வானத்தின் கதவைத் திறக்குமாறு கோறுவார்கள். வானம் திறபடும். இவ்வாறு ஒவ்வொரு வானத்தையும் கடந்து ஏழாவது வானத்தை அடைந்ததும் அல்லாஹ் “எனது அடியானை இல்லிய்யீனெனும் மிக உயர்ந்த இடத்தில் பதியுங்கள். பின்பு அவனை பூமிக்கே அனுப்புங்கள். ஏனெனில் அவனை நான் அங்குதான் படைத்தேன். அங்குதான் மரணிக்கச்செய்தேன். மீண்டும் அங்கிருந்தே உயிர்கொடுத்து உழுப்புவேன்” என்று வானவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பான்.

மரண வீட்டில் இருக்கும் மையித் தன்னை விரைவாக கப்ரில் கொண்டுசென்று அடக்கம்செய்யுமாறும் கூறும். அதனைத் தாமதப்படுத்தும்போதெல்லாம் “ஏன் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கும். மிக்க சந்தோசமாக அமைதியாக இருக்கும். அவ்வாறு அம்மையித் பேசுவதை சுற்றியிருக்கும் மனு, ஜின் இனத்தைத் தவிர மற்றைய அனைத்துப் படைப்புகளும் உணர்ந்துகொள்ளும்.

மண்ணறையிலே கொண்டுசென்று அடக்கம்செய்துவிட்டு அனைவரும் மீண்டு செல்லும்போதும் அம்மையித் கலக்கமோ, நடுக்கமோ இன்றி மகிழ்வுடன் இருக்கும். பின்பு இல்லிய்யீனில் பதியப்பட்ட ஆன்மா பூமிக்குத் திருப்பப்பட்டு மண்ணறையிலிருக்கும் அதன் உடலோடு சேர்க்கப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து அழகான தோற்றத்தில் மனம்வீசும் நிலையில் இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் பிரகாசமாக இருப்பார்கள். மையித்தை அண்மித்து கேள்விகளை ஆரம்பிப்பார்கள்.

உனது இரட்சகன் யார்? من ربك؟
உனது மார்க்கம் எது? وما دينك؟
உனது வழிகாட்டி யார்? ومن نبيك؟
இவை ஒவ்வொன்றுக்கும் அம்மையித் அழகான முறையில்

அல்லாஹ்வே எனதிரட்சகன் ربي الله
இஸ்லாம்தான் எனது மார்க்கம் ديني الاسلام
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது வழிகாட்டி نبيي محمد (صل)
என்று பதிலளிக்கும்.

உடனே வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்கும். صدق عبدي “எனதடியான் உண்மையுரைத்துவிட்டான்”

பின்பு அவ்வானவர்கள் அம்மையித்திற்கு அவரது இடது புறத்தில் பயங்கர நரகை எடுத்துக் காண்பிப்பார்கள். எனினும் வாழும்போது செய்த நல்லறங்களுக்காக அவரது வலப்புறத்தில் சுவனத்தை எடுத்துக்காண்பிப்பார்கள். பின்பு அவருக்கு சுவன ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவன விரிப்புகளும் விரிக்கப்படும். அதுமுதல் அவ்வான்மா சுவனத்தின் இதமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும். கண்ணெட்டும் தூரத்திற்கு அம்மண்ணறை விசாலமாக்கப்படும்.

அதன்பின்பு அழகானதொரு மனிதனின் தோற்றத்தில் மனம்வீசும் ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவர் அம்மையித்திடம் வருவார். வந்து “நீர் வாக்களிக்கப்பட்டிருந்த இந்நாளைக்கொண்டு நெற்செய்திபெறுங்கள்” என்று சுபசோபனம் கூறுவார். அதற்கு அவ்வான்மா “நீர் யார்?” என வினவும். அதற்கு அவ்வுருவம் “நீர் உலகில் செய்த நன்மையான காரியங்களின் மொத்த வடிவம்தான் நான்” என்று கூறும். பின்பு அம்மையித்திற்கு சுவனத்தின் காட்சிகள் காண்பிக்கப்படும். ஆதனைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வான்மா “ربي أقم الساعة حتى ارجع إلى اهلي ومالي” “எனதிரட்சகனே! எனது குடும்பத்தின்பாலும் சொத்து செல்வங்களின் பாலும் நான் செல்வதற்காக மறுமையை துரிதப்படுத்திவிடு” என்று பிறார்த்திக்கும். புpன்னர் அல்லாஹ் அவ்வுத்தம அடியானை புது மனமகனைப்போன்று மறுமைநாள் நிகழும்வரை உறங்கவைப்பான்.”

ஒரு முஃமினுடைய மரணத்தருவாயும் அதன்பின்னரான மண்ணறை நிகழ்வுகளும் இவ்வாறுதான் அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதேசமயம் ஒரு இறை நிராகரிப்பாளனதுää இணைவைப்பவனது நிலைமை எத்தகையது என்பதையும் நபியவர்கள் எமக்குத்தெளிவுபடுத்தியுள்ளார்கள். தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி அதிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறும் வலியுருத்தியுள்ளார்கள்.

நிராகரிப்பாளன்.

அல்லாஹ்வை நிராகரிக்கும், அவனுக்கு இணைவைக்கும், அவனது கட்டளைகளுக்கு மாறுசெய்யும் ஒருவனது மரண நிலை எவ்வாறிருக்கும் என்பதை திருமறைக் குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
ولو ترى إذ الظالمون في غمراة الموت والملائكة باسطوا ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن اياته تستكبرون
“இவ்வநியாயக் காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின் மலக்குகள் தங்கள் கைகளைநீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கூறிக்கொண்டிருந்ததாலும் அவனது வசனங்களை விட்டும் (ஏற்காது) பெருமையடித்துக்கொண்டிருந்ததாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவான வேதனைகொடுக்கப்படுகிறது. (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்அன்ஆம்: 93)

ஒரு கெட்ட மனிதனது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவனை எவ்வாறு வானவர்கள் நெருங்குவார்கள் என்பதனை பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

“நாஸிஆத் எனும் மலக்குகள் கறுப்பு நிறத்தோற்றத்தில் அம்மனிதனிடம் இறங்கிவருவார்கள். அவனது கண்ணெட்டும் தூரம்வரை அமர்வார்கள். பின்னர் மலகுல் மௌத் அவனது தலைப்பகுதியில் வந்தமர்து “ஏ அழுக்குற்ற ஆன்மாவே! ஆல்லாஹ்வின் கோபத்திற்கும் அவனது வெறுப்பிற்குமாளான நிலையில் இவ்வுடலைவிட்டும் வெளியேறு” என்பார்கள். ஆப்போது அந்த ரூஹ் அவனது உடலெங்கும் ஓடி ஒழிந்துகொள்ள முயற்சிக்கும். ஆனால் அம்மலகுல்மௌத் அந்த ரூஹை பலவந்தமாக மிகக்கடுமையன முறையில் பறித்தெடுப்பார். அடர்ந்த முட்புதரின்மீது போட்டுவிட்டு இழுத்து எடுக்கப்பட்ட மெல்லிய ஆடையைப் போன்று அவனது ரூஹ் உருக்குலைந்து சின்னாபின்னமாகி அவ்வுடலைவிட்டும் வெளியேரும்.

ஆவ்வாறு ரூஹ் பிறியும் சந்தர்ப்பத்தில் அவன் அல்லாஹ்விடம் கூறுவான் “அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலக்கத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக!” என்று கூறுவான். “உலகில் நான் விட்டுவந்ததில் (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). ஆவ்வாறன்று நிச்சயமாக அது அவன் கூறும் வெறும் வார்த்தையே! இன்னும் அவர்கள் (மறுமைக்காக) எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன்னே தடுப்பு இருக்கிறது. (அதனால் அவர்கள் உலகின்பால் மீண்டுவர சக்திபெறமாட்டார்கள்.)” (அல்முஃமினூன் : 99,100)

உடனே அம்மலக்குகள் அந்த ரூஹை எடுத்து நரகிலிருந்து கொண்டுவரப்பட்ட தூநாற்றம் வீசக்கூடிய கபன் துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு வானத்தின்பால் உயர்ந்து செல்வார்கள். ஆச்சமயம் அண்டத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பிற மலக்குகள் “என்னவொரு நாற்றமான ஆன்மா இது?” என்று வினவுவார்கள். ஆதற்கு அவ்வானவர்கள் “இன்னாரது மகன் இன்னாரது ஆன்மாதான் இது” என்று அவ்வான்மா பூமியில் என்ன பெயர் கூறி அழைக்கப்பட்டதோ அதே பெயரைக்கூறி ஏனைய வானவர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார்கள்.

இவ்வாறு உயரச்சென்று முதலாவது வானத்தை அடைந்ததும் மலக்குகள் அதன் வாயிலைத்திறக்குமாறு கோருவார்கள். ஆனால் அது திறபடமாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

"إن الذين كذبوا باياتنا وإستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط"
“யார் எமது வசனங்களைப்பொய்ப்படுத்தி அதனைவிட்டும் பெறுமையடித்தார்களோ அவர்களுக்கு வானங்களின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காது வழியாக ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சுவனம் நுழையவும் மாட்டார்கள்” (அல்-அஃராப் : 40)

புpன்னர் அல்லாஹ் அவ்வான்மாவைப் பூமியின் அடியிலிருக்கும் “ஸிஜ்ஜிய்யீனில்” பதியுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிடுவான். உடனே அது பூமியை நோக்கி வீசப்படும். இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆனிய வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

“فكانما خر من السماء فتخطفه الطير او تهوى به الريح في مكان سحيق
“அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக்கொண்டு சென்றதைப்போன்று அல்லது (பெருங்) காற்று அவனை வெகுதூரத்திலுள்ள இடத்திற்கு அவனை அடித்துச்சென்றதைப்போன்றோ ஆகிவிடுகிறான்.” (அல்ஹஜ் : 31)

மையித்தின் வீட்டிலிருந்து மண்ணறையில் அடக்கம் செய்வதற்காக மையித்தைத் தூக்கிவரும்போது அம்மய்யித் கதறுத், கத்தும், தன்னை எங்கு கொண்டுசெல்கின்றீர் என்று சப்தமிடும். மண்ணறையில் தன்னை அடக்கம்செய்யவேண்டாம் என்றும் அலறும். இவ்வாறு அந்த மையித் போடும் சப்தத்தை சுற்றியிருக்கும் மனிதனையும் ஜின்களையும் தவிற மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மண்ணறையிலே அடக்கம் செய்யப்பட்டதும் வானத்திலிருந்து வீசப்பட்டு பூமியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் ஸிஜ்ஜிய்யீனில் அந்த ரூஹ் பதியப்பட்டதன் பின்னர் மீண்டும் மண்ணறையிலிருக்கும் அந்த உடலோடு அவ்வான்மா சேர்க்கப்படும். அதனைத் தொடர்ந்து நீல நிறக்கண்களையுடைய கறுப்பு நிறத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் முன்கர், நகீர் எனும் இரு மலக்குமார்கள் வருவார்கள். விசாரணை ஆரம்பமாகும்.

உனது இரட்சகன் யார்? من ربك؟
உனது மார்க்கம் எது? وما دينك؟
உனது வழிகாட்டி யார்? ومن نبيك؟
அவ்வானவர்கள் இம்மூன்று கேள்விகளையும் கேட்டதும் அதற்கு அம்மனிதன் هاه هاه لا ادري” “ஐயோ...! ஐயோ...! எனக்குத் தெரியவில்லையே...!” என்று புலம்புவான். உடனே வானிலிருந்து “அவன் பொய்யுரைத்துவிட்டான்” என்று ஒரு அசரீரி கேட்கும். உடனே அம்மலக்குகள் தமது கையிலிருக்கும் பாரிய சுத்தியலினால் அவனது தலையிலே ஓங்கி அடிப்பார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு பெரியதொரு மலையில் அடித்தால் அம்மலை வெடித்து தூள் தூளாகி இருந்த இடம்காணாது போய்விடும் என்று நபியவர்கள் அதன் கொடுமையை விளக்குகிறார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு அம்மனிதனின் தலையிலே அடித்ததும் அவனது தலை சிதறிச் சின்னாபின்னமாகி நொருங்கிப் போகும். அப்போது அவனிடும் கூச்சலைää ஓலத்தை மனிதனையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுப்பதாகவும் இதனை மனிதன் கேட்பானானால் அவ்விடத்திலேயே அவன் மூர்ச்சையாகி விடுவான் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

அதனைத்தொடர்ந்து முன்கர் நகீர் மலக்குகள் அம்மையித்தை வலப்புறம் திரும்பிப் பார்க்கக் கூறுவர். அங்கே அவன் சுவனத்தின் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பான். ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருப்பான். உடனே அம்மலக்குகள் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களினால் நீ நுழையவேண்டிய இடம் இதுவல்ல நரகம்தான்” என்று கூறி அவனை இடப்புறம் திரும்பிப்பார்க்கக் கூறுவர். அங்கு அவன் நரகத்தின் பயங்கர வேதனைகளையும் தண்டனைகளையும் காண்பான். அதனைக் கண்டு அவன் அஞ்சி நடுநடுங்கிக்கொண்டிருப்பான்.

அதில் அவனுக்கு நெருப்பாலான ஆடைகள் அணிவிக்கப்படும். நெருப்பாலான விரிப்புகள் விரிக்கப்படும். நெருப்பினாலான போர்வைகளால் அவன் போர்த்தப்படுவான். நரகின் அனற்காற்று வீசும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கி விழுவான். இதனை அல்குர்ஆன் “النار يعرضون عليها غدوا وعشيا” “அந்(நரக) நெருப்பு அதன் மீது காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும்.”(அல்முஃமின் : 46) என்கிறது.

அதன் பின்னர் அவனிடத்தில் அசிங்கமான பயங்கரமான உருவத்தில் ஒரு மனிதன் வருவான். அவனைப் பார்த்தாலே மரணித்துவிடுமளவுக்கு அவனது தோற்றம் மிகப் பயங்கரமாக இருக்கும். அந்த மையித் அப்பயங்கர உருவத்தைப் பார்த்து “யார் நீ?” என்று கோட்பான். “எதற்கு என்னிடம் வந்தாய்?” என்று வினவுவான். அதற்கு அவ்வுருவம் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களின் மொத்தவடிவம்தான் நான். அல்லாஹ் அப்பாவகாரியங்களை எனது வடிவில் தற்போது உன்னிடத்தில் அனுப்பியுள்ளான்” என்று கூறும்.

பின்பு மண்ணறையின் இருபக்கச் சுவர்களும் அவனை நெருக்க ஆரம்பிக்கும். படிப்படியாக நெருங்கி அவனது இரு விலா எண்புகளும் ஒன்றோடு ஒன்று பிணையுமளவுக்கு நெருக்கும். இந்த வேதனையே இப்படியென்றால் நரகின் படுபயங்கர வேதனை எப்படியிருக்குமோ என எண்ணி அவன்“رب لا تقم الساعة” “இறைவா மறுமையை ஏற்படுத்தி விடாதே...!” என்பான். அதுமுதல் மறுமை நிகழும்வரை அவன் அம்மண்ணறையில் வேதனைகளை அனுபவித்துக்கொண்டே இருப்பான்.

இவ்வாறு தான் பாவியான ஓருவனது கப்ருடைய வாழ்க்கை இருக்கும். கப்ருடைய வேதனைகள் பெரும் பாவங்கள் செய்த, இறைவனுக்கு இணைவைத்து, அவனை நிராகரித்தவனுக்குத்தான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இதற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருந்தும்.

ஒரு முறை நபியவர்கள் ஒரு கழுதையில் பிரயாணித்துக்கொண்டிருந்தார்கள். ஸஹாபாக்களில் சிலர் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். இடைநடுவே கழுதை மிரண்டு அண்ணலாரை கீழே தள்ளிவிடுகின்றது. உடனே நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து இங்கு ஏதும் மண்ணறைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். அண்ணலாருக்கு இரண்டு மண்ணறைகள் காட்டப்பட்டன. நபியவர்கள் கூறினார்கள் “இவ்விரு மண்ணறைவாசிகளும் கப்ருடைய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் வாழும் போது சிறு நீர் கழித்துவிட்டு ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யாதவர். (மற்றுமொரு அறிவிப்பில்) மக்களைவிட்டும் மறைந்திருந்து சிறு நீர்க் கழிக்காதவர். மற்றையவர் கோள் சொல்லி, பொய் பேசித் திரிந்தவர் என்றார்கள்.

அதுமட்டுமன்றி அண்ணலாரின் மிக்க அன்புக்குரிய மனைவியர்தாம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள். அவர்களைப் பார்த்தே நபியவர்கள் “ஆயிஷாவே! கப்ருடைய வேதனையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்” என்று கூறினார்கள்.

நபிகலாரோடு யுத்தங்களில் கலந்துகொண்ட ஒரு நபித்தோழர்தாம் முஸ்அப் பின் முஆத் (ரழி) அவர்கள். அந்த நபித்தோழர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் அல்லாஹ{ அக்பர் என்றார்கள். பின்பு ஸ{ப்ஹானல்லாஹ் என்றார்கள். வழமைக்கு மாற்றமான, நபியவர்களது இந்த செயற்பாடு குறித்து ஸஹாபாக்கள் வினவியபோது நபியவர்கள் கூறினார்கள். “முஸ்அப் அடக்கம் செய்யப்பட்டதும் கப்ர் அவரை நெருக்கியது கண்டு நான் அல்லாஹ{ அக்பர் என்றேன். அதன் காரணமாக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது. எனவே கண்டு ஸ{ப்ஹானல்லாஹ் என்றேன்” அந்த நபித்தோழரோடு எம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பாவங்களோடு சங்கமித்திருப்பவர்கள். அப்படியானால் எமது நிலை பற்றி நாம் சற்று அல்ல அதிகமாகவே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபியவர்கள் ஒருமுறை “எனக்குப் பல காட்சிகள் காட்டப்பட்டன. எனினும் கப்ர் வேதனையைப் போன்று அகோரமான காட்சியை நான் எங்கும் காணவில்லை” என்று கூறினார்கள். மற்றுமொரு முறை கப்ர் உடைய விடயத்தில் இவ்வாறு கூறினார்கள் “நான் கேட்பதை நீங்களும் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். எனினும் அதனால் நீங்கள் மையித்தை அடக்கம் செய்யாது விட்டுவிடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்” என்றார்கள்.

இறைத் தூதர்கூட தமது மௌத்துடைய நேரத்திலிருக்கும்போது எம்மைப் பார்த்து எச்சரித்த ஒரு விடயம்தான் لااله الا الله إن للموت سكراة அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, நிச்சயமாக மரணத் தருவாயிலே வேதனை இருக்கின்றது” என்று மூன்று முறை கூறினார்கள்.

எனவே இந்த கப்ர் உடைய கொடூரமான வேதனைகளிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் நபி (ஸல்) அவர்கள் எமக்கு துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அத்தஹிய்யாத்திலே ஓதக்கூடிய மிக முக்கியமான துஆ.

اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحياء والممات ومن شر فتنة مسيح الدجال.
اللهم إني اعوذ بك من الجبن والبخل واعوذ بك من أن أرد الى ارزل الامر واعوذ بك من فتنة الدنياء واعوذ بك من فتنة القبر
அதிலும் ஒரு நிபந்தனையுண்டு. உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால் தௌபாவுடைய வாயில்கள் மூடப்பட்டுவிடும். அதன் பின்னால் கேட்கப்படும் எந்தப் பிறார்த்தனையும் ஏற்கப்படமாட்டாது. எனவே மரணம் எத்தருனம் எம்மை வந்தடையும் என்பதை நாம் அறியமாட்டோம். எனவே அதற்குத் தயாராயிருக்கும் வண்ணம் அல்லாஹ்விடம் தௌபாக்கேட்டு எமது பாவக்கரைகளைப் போக்கிக்கொள்ளவேண்டும். முஃமினான நல்லடியானது மரணம் போன்று எம் மரணமும் சம்பவிக்க ஆசைகொண்டு அதன்படி வாழவேண்டும். காபிரான பாவியின் மரணத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல்தேடவேண்டும். அல்லாஹ் எம்மனைவரது ஆன்மாக்களையும் நல்ல முறையில் கைப்பற்றுவானாக…!

ஜிஹாத் மதச் சுதந்திரத்திற்கு எதிரானதா? Posted by Aalif Ali | Labels: ஜிஹாத் மதச் சுதந்திரத்திற்கு எதிரானதா? |

Posted by Rikaz Network Inc. 8:29 AM, under | No comments


அல்லாஹ் மனிதர்களை நன்நெறிப்படுத்துவதற்காக காலத்திற்குக் காலம் தூதுவர்களையும் வேதங்களையும் அனுப்பிவைத்தான். அந்தவகையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முழு உலகத்துக்குமான இறுதித்தூதராகவும் அல்குர்ஆனை அவர்களது வாழ்வின் சகல படித்தரங்களுக்குமான வழிகாட்டியாகவும் அருளினான். இதனூடாக நன்மை, தீமை என்பவற்றை தெளிவுபடுத்திய இறைவன் சுவனம், நரகத்திற்கான பாதைகளையும் தெறிவுபடுத்திவிட்டான். அதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.மேலும் (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்” (90:10)

இவ்வாறு இரு பாதைகளைக்காட்டிய இறைவன் நீ இந்தப் பாதையைத்தான் தெரிவு செய்ய வேண்டும்என்று மனிதனை நிர்ப்பந்திக்கவில்லை. அவரவர் விரும்பும் பாதையை, மார்க்கத்தை,மதத்தைத் தேர்வுசெய்துகொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளான். அவன் காட்டித்தந்த பாதையில் மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவனாகவோ அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்க முடியும் என்பதனையும் அல்குர்ஆனில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான். நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமை பற்றிய) வழியைத் தெளிவுபடுத்தினோம். (அதில்) அவன் நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப) வனாகவும் இருக்கலாம்.” (76:03)

ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டதுமே பலரும் உசாராகி விடுகின்றார்கள். ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், இஸ்லாத்தின் குறகிய கால வளர்ச்சியை சீரனிக்க முடியாதவர்கள் இந்த ஜிஹாத் எனும் யுத்தத்தினூடாகவே இஸ்லாம் பரப்பப்பட்டது என்றும் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் வாள் முனையில் காட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். வரலாற்று நெடுகிலும் நடந்த யுத்த வெற்றிகளின் பின்பு மக்கள் இஸ்லாத்தில் நுழைந்தமையைக் காரணங்காட்டி லியோனி கைட்டான், கோல்ட்ஸியர்,பண்டலி ஜோஸி, எம்.கியோஜி மற்றும் பெர்னார்ட் லுயிஸ் போன்ற சில அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்று குற்றக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

உண்மையில் வரலாற்றில் எங்குமே முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் நோக்கிலோ, தமது இனத்தின் எண்ணிக்கையைக்(Quantity) கூட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவாவிலோ படையெடுத்துச் செல்லவில்லை. அவ்வாறு எண்ணிக்கையை அதிகரிப்பதால் இஸ்லாம் பலவீனப்படுகின்றதேயல்லாமல் ஒருபோதும் பலம்பெறுவதில்லை. மாறாக அவர்கள் படையெடுத்துச் சென்றதெல்லாம் இரண்டே இரண்டு விடயங்களுக்காகத்தான்.

ஒன்று; முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுருத்தல் வந்தால் அதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கும் இரண்டு; அராஜக ஆட்சியின் கீழ் அல்லுற்ற மக்களே அவ்வாட்சியாளர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றி விடுவிக்குமாறு கோரியதனாலும் அடுத்து இறையாட்சியின் அம்மக்களை சுபீட்சமடையச் செய்யவும்; தாம்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறச்செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கிலுமே படைநடாத்திச் சென்றார்கள். இதற்கு கடந்துசென்ற வரலாறே சான்று.

அல்லுற்ற மக்களை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றினான் என்பதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை (மற்ற) சிலரைக்கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் (பாதிரிகளின்) மடங்களும் கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தளங்களும் யூதர்களின் வணக்கஸ்தளங்களும் மஸ்ஜிதுகளும் - இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகக்கூறப்படுபவையாவும் இடிக்கப்பட்டுப் போயிருக்கும்(22:40) என்கின்றான்.
ரோம் நாட்டு மன்னன் ஹெர்க்யூலிஸ் முஸ்லிம்கள் கைப்பற்றியிருந்த பகுதிகளை ஆக்கிரமிக்க பெரும்படையுடன் வந்தபோது தளபதிகளான காலித் பின் வலீத், அபூ உபைதா (ரழி) ஆகியோர் அப்பிரதேச மக்களிடம் பெற்ற ஜிஸ்யாவைத் (ஆள் வரி) திருப்பி ஒப்படைத்து விட்டு முன்சென்று போராட முனைந்த போது அக்கிறிஸ்தவ மக்கள் கண்ணீர் மல்கும் கண்களுடன் கவலை தொய்ந்த முகத்துடனும் நீங்கள் அவர்களுடன் போரிட்டு வென்று வரவேண்டும். உங்களது ஆட்சியில் ஜிஸ்யா வெலுத்தி வாழ நாம் ஆவளாக இருக்கின்றோனம்என்றனர்.
ஆரம்பத்தில் இஸ்பைனில் கிறிஸ்தவ அரசர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூதர்கள் மேற்கு ஆபிரிக்கா நோக்கித் தப்பி வந்து தளபதி மூஸா பின் நுஸைரிடம் வேண்டியதற்கிணங்கவே அவர் இஸ்பைனை வென்றெடுப்பதற்காக தாரிக் பின் ஸியாதை அனுப்பினார். அவ்வாறுதான் சிந்துப் பிரதேசத்தில் பிராமணபுரியை ஆண்டுவந்த மன்னன் உதயவீரன் மக்களை அதிமாகவே நெருக்கடிக்குட்படுத்தியதால் அம்மக்கள் கலீபா வலீத் பின் அப்துல் மலிக்கிடம் தம்மை காப்பாற்றக் கோரியபோது முஹம்மத் பின் காசிமை அங்கே அனுப்பி அம்மக்களைக் காப்பாற்றினார்.
இவ்வாறு தம்மைக் காப்பாற்றக் கோரி அழைப்பதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இன்னும் அல்லாஹ்வின் பாதையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விசயத்திலும் நீங்கள் யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ எங்கள் இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிவிடுவாயாக. இவ்வூர் வாசிகள் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். நீ எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் புறத்தால் ஒரு உதவியாளரை அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்து அழைக்கின்றனர்.(04:75) என்கிறான்.

“The Spread of Islam in the world”உலகம் முழுதும் பரவிய இஸ்லாம்என்ற தனது நூலிலே சேர் தோமஸ் ஆர்ணல்ட் எனும் கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் நிலவிய மதப் பாதுகாப்புணர்வு அதே காலகட்டத்தில் சின்ன ஆசியா (ஆசியா மைனர்) வாழ்ந்த கிறிஸ்தவர்களையும்கூட சல்ஜுக்கிய துருக்கியர்களைத் தங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளும்படி விரும்பச் செய்தது. எட்டாவது மைக்கல் (1261-1282) என்பவரின் ஆட்சியில் சின்னாசியாவில் சிறு கிராமவாசிகள் துருக்கியர்களைத் தமது கிராமங்களை வென்று ஆட்சி செலுத்துமாறு வேண்டினர். பலர் தமது நாடுகளைவிட்டு துருக்கிய ஆட்சி நிலவும் பிரதேசங்களுக்குக் குடியேறினர்.என்றவாறு வரலாற்று உண்மையை எழுதுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்நெடுங்காலம் ரோம் ஆட்சியில் அனுபவியாத சுதந்திர வாழ்க்கையை அக்கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய ஆட்சியின் முதல் நூற்றாண்டிலேயே அனுபவித்தார்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் நிம்மதியாக வாழ்ந்துள்னர் என தனது நூலிலே எழுதுகின்றார்.
ஜிஹாத் என்றால் நேரடியகவே யுத்தம் என்றோ போர் என்றோ கருத்துக்கொள்வது பிழையானது. அடிப்படையில் ஜிஹாத் என்பது முயற்சி செய்தல், கடுமையாக உழைத்தல், ஒரு விடயத்திற்காகப் பாடுபடுதல் என்று பல கருத்துக்கள் கொள்ளப்படுகின்றன.


ஒரு தீமையைத் தடுப்பதற்கும் அவ்விடத்தில் நன்மையை விதைப்பதற்கும் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் ஜிஹாத் (முயற்சி, உழைப்பு) என்று அழைக்கமுடியும். அது நாவின் மூலம், எழுத்து மூலம் என பல்வேறு பரிமாணங்களில் இடம்பெறலாம். இவற்றில் சாத்தியமில்லாது போகும் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் தான் ஆயதமேந்திப் போராடியாவது அத்தீமையை ஒழித்துக்கட்டுவதற்கான திட்டங்களில் இரங்கமுடியும். இதுவல்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஜிஹாத் என்று கூறிக்கொண்டு களத்தில் ஆயுதங்களுடன் குதிக்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கூறவில்லை.
இஸ்லாத்தைப் பொருத்தவரை அனைவரும் இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. அல்லாஹ் ஸ{ரதுல் பகறாவில் 255 ஆம் வசனத்தில் தனது ஆட்சியதிகாரங்களையும் வல்லமைகளையும் தானே அனைத்துக்குமான ஒரே அதிபதி என்றெல்லாம் கூறிவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த வசனத்தின் ஆரம்பத்திலேயே“(சத்திய இஸ்லாம்) மார்க்கதில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை. (ஏனெனில்) வழிகேட்டிலிருந்து நேர்வழி உறுதியாகவே தெளிவாகிவிட்டது என்று மனிதனுக்கு மதச்சுதந்திரத்தை அளிக்கின்றான்.
மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். மேலும் உமதிரட்சகன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரும் விசுவாசித்திருப்பர். எனவே மனிதர்களை அவர்கள் (அனைவருமே) விசுவாசிகளாக வேண்டும் என்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா? எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அது விசுவாசித்துவிடாது(10:99,100)
நாம் யாரையும் நிர்ப்பந்தித்து இஸ்லாத்தில் நுழைவிக்கவேண்டியதில்லை. அவருக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பது மட்டுமே போதுமானது. இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். நீர் அவர்களை அடக்கியாள்பவரல்லர். (எனவே) நமது அச்சுருத்தலைப் பயப்படுவோரை இந்தக் குர்ஆனைக்கொண்டு நல்லுபதேசம் செய்வீராக(50:45) மேலும் கூறுகின்றான் “(அல்லாஹ்வின் தூதைப்) பகிரங்கமாக எத்திவைப்பதைத்தவிர (வேறு கடமை) எம்மீது இல்லை(36:17) ஆக இவ்வாறான அல்குர்ஆனிய மற்றும் நபியவர்களின் வழிகாட்டல்களின் பிரகாரமே பிற்பட்ட காலங்கள் ஸஹாபாக்களும் முஸ்லிம்களும் நடந்துள்ளார்கள். இதனை ஆதாரபூர்வமான பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து கற்க முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சேனைக்கு தளபதியாக ஒருவரை நியமித்தால் அவருக்கு பின்வருமாறு உபதேசிப்பார்கள். இறைவனுக்காவென்று அவனது பெயரால் போராடுங்கள். போர் செல்வங்களில் கையாடல் செய்யாதீகர்ள். ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள். மக்களை அங்கவீனப்படுத்தாரீர்கள். குழந்தைகளைக் கொலைசெய்யாதீர்கள். இவ்வாறு தொடர்கின்றது....” (முஸ்லிம்:3565)
ஹஸீன் (ரழி) அவர்கள் மதீனத்து பனூ சலீம் பின் அவ்ப் குலத்தைச் சேர்ந்த ஒரு அன்ஸாரித் தோழர். அவர் இஸ்லத்தை ஏற்றிருந்தும் அவரது இரு புதல்வர்களும் கிறிஸ்தவ மதத்தில் உறுதியாகவே இருந்துவந்தமை இவரைப் பெரிதும் வாட்டியது. எனவே தனது புதல்வர்கள் என்ற உரிமையில் அவர்களை இஸ்லாத்தில் நுழையவைக்க நபியவர்களிடம் அனுமதி வேண்டிச்சென்றார். இதன்போதுதான் அல்லாஹ் لا إكراه في الدينஎன்ற வசனத்தை இறக்கிவைத்து அக்காரியத்தைத் தடுத்தான்
சிரியாப் போருக்காக உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களை கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் அனுப்பியபோது கூறிய யுத்த தர்மங்கள் இங்கு ஞாபகிக்கத்தக்கவை. இவை யுத்தத்தின்புது பிற மதங்களை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ஆசிரமங்களில் இருக்கும் துறவிகளை துன்புரத்தாதீர்கள். அவர்களது ஆலயங்களை அழித்துவிடாதீர்கள். பிற மதகுருக்களை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள்.என்று உபதேசித்தார்.
ஹிராவாசிகளுடன் நடந்த ஒரு யுத்த ஒப்பந்தத்தில் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவித்த பிரகடனம் கூட ஒரு காலத்திலும் போர்க்களினூடாக இஸ்லாம் பரபப்படவில்லை என்பதற்குத் தக்க சான்றாகும். அப்பிரகடனத்தின்படி“(முஸ்லிம் அல்லாதவர்களுடைய) சந்நியாசி மடங்களும் கோவில்களும் அழிக்கப்படமாட்டா. எதிர்த்துப் போராடும் சமயம் அவர்கள் சரணடைந்துவிட்டால் அவர்களது அரண்மனைகள் துவம்சிக்கப்படமாட்டா. கோவில்களில் சங்கு ஊதுவதும் மணி அடிப்பதும் தடுக்கப்படமாட்டா. வைபவங்களில் சிலுவைகளைச் சுமந்து ஊர்வலம் செல்வதுகூட தடுக்கப்படமாட்டாஎன்று அமைந்திருநுதது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களுளுக்கு அஸ்பக் என்ற ஒரு அடிமை இருந்தார். அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் உமர் (ரழி) அவர்கள் அவ்வாறு கூறும்போதெல்லாம் அஸ்பக் அச்சமின்றி உடனே அதனை மறுத்துவிடுவார். இச்சந்தர்ப்பத்தில் உமர் அவர்கள் لا إكراه في الدين” “லா இக்ராஹ பித்தீன்என்ற குர்ஆனிய வசனத்தை ஓதிவிட்டு மௌனமாகச் சென்றுவிடுவார். ஒரு ஜனாதிபதி தன் அடிமைவிடயத்தில் கூட இஸ்லாத்தை ஏற்குமாறு எந்தவித நிர்பந்தமும் செய்யாது நடந்துகொண்டுள்ளமை இங்கு கவனம் செலுத்தி நோக்கத்தக்கவொன்றாகும்.
உமர் (ரழி) அவர்களது முஸ்லிம் சேனாப்படை ஜெரூஸலத்தை வெற்றிகொண்டதும் சொப்ரானியஸ் பாதிரியார் ஜெரூஸலத்தை உமர் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதனைச் சுற்றிக் காண்பித்தவாறு கனீஸதுல் கியாமா என்ற மாதாக்கோயிலைப் பார்வையிட வரும்போது அஸர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. உடனே கலீபா அவர்கள் தொழுகையை நிரைவேற்ற நாடினார். அதற்கு பாதிரியார் அந்த மடாலயத்திலேயே தொழுதுகொள்ள ஆலோசனை கூறியதும் அதற்கு உமர் (ரழி) அவர்கள் அளித்த பதில் இஸ்லாம் எந்தளவு பிற மதங்களை மதிக்கின்றதோ அந்தளவு அதற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. உமர் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வை எந்த இடத்திலும் தொழ முடியும்தான். ஆனால் நான் இங்கு தொழுதால் பின்னர் வரும் சமூகம் இது முஸ்லிம்களுக்குரியது என்று உரிமை கொண்டாடிவிடக்கூடும். அதற்கு நான் முன்மாதிரியாய் இருந்துவிட மாட்டேன்என்று கூறினார்கள்.

இவ்வாறே உஸ்மானிய ஆட்சியின் சுல்தான் இரண்டாம் முஹம்மத் கொன்ஸ்தாந்துநோபிளை வெற்றிகொண்டதன் பின்னர் தானே கிறிஸ்தவத் திருச்சபையின் பாதுகாவலன்எனப் பறையறிவித்தார். அதேபோன்று துருக்கியருக்கும் ஹங்கேரியருக்கும் இடையில் போர் உக்கிரமமடைந்திருந்த ஒரு சமயம். துருக்கியத் தளபதியாக இரண்டாம் முராத் காணப்பட்டார். ஹங்கேரி மன்னன் ஜோர்ஜ் பிரான்கோவிக் (ஸர்பியா) தன் தளபதி ஹ{னியாடியைப் பார்த்துஇன்று வெற்றி உனக்கக்கிடைத்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டான். அதற்கு தளபதிஅனைவரையும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்தே தீருவேன்என்றான். இதே கேள்வியைத் துருக்கியத் தளபதி இரண்டாம் முராதிடம் கேட்டுவர ஒரு தூதுவரை அனுப்பிவைத்தான் மன்னன் ஸர்பியா.
இதுதான் தூதன் கொண்டுவந்த பதில். இந்த யுத்தத்தில் வெற்றி எனது படைக்குக் கிடைத்தால் ஒவ்வொரு பள்ளிவாயிலுக்கும் அண்மையில் ஒரு மடாலயத்தைக் கட்டுவிக்க அம்மக்களுக்கு அனுமதியளிப்பேன். எவர் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்த நாடுகின்றாரோ அவர் அதில் தொழலாம். எவர் ஆலயத்தில் வணக்கம் செலுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே செய்யலாம். நான் சமயச் சுதந்திரத்தை மக்கள் விருப்புக்கு விட்டுவிடுவேன்என்றார். இதனைக் கேட்ட மன்னனின் கண்கள் ஆச்சரியத்தில் பூச்சொரிந்தன.
இன்று உலகம் பூராகவும் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பல்வேறு தப்பும் தவறுமான நச்சுக்கருத்துக்கள் தூவப்பட்டுவருகின்றன. முஸ்லிம்கள் தீவிரவாதிகள், அவர்கள் குழப்பக்காரர்கள்என்று நாளாந்தப் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இணைய தளங்களும் கொட்டை கொட்டையாக செய்திகளைப் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றைப் படித்துவிட்டு பொதுமக்கள்கூட முஸ்லிம்களை இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டின் பின்னணியிலேயே பார்க்கின்றனர்.

ஆனால் இதுவரை நாம் இங்கு பார்த்த அல்குர்ஆனின் போதனைகளும் நபியவர்களின் வழிகாட்டல்களும் அதனைப் பின்பற்றி ஒழுகி நடந்த முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றுகள் யாவும் இஸ்லாம் என்பது தீவிரவாதமோ பலாத்காரத்தினால் பரப்பபட்ட மார்க்கமோ அல்ல என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்திருப்பீர்கள்.

உண்மையும் அதுதான். இஸ்லாம் ஒரு சாந்தி மார்கம். இது அமைதியையே விரும்புகின்றது. இவ்வுண்மையை உணரும்தருவாயில் நீங்களே இஸ்லாத்தின்பால் நாட்டம்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்

Posted by Rikaz Network Inc. 8:21 AM, under | No comments


ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்
.....ஆலிப் அலி.....

நான் பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு இளைஞன். வாழ்க்கையின் ஏகபோக உரிமைகளை அனுபவிப்பதில் விடாப்பிடியாய் இருந்தேன். பணம், மாடி வீடு, வாகனம் என்பவைதான் வாழ்க்கை என மிதம்மிஞ்சி எண்ணியிருந்தேன். எனக்கும் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் எவ்விதத்திலும் என்னைவிட தரம் குறைந்தவர்களல்லர்.

ஒரு வெள்ளிக்கிழமை. பொழுதுபோக்கிற்காக கடலில் சுழியோடச்செல்ல நண்பர்களோடு தயாராகிக்கொண்டிருந்தேன். ஜும்ஆப் பிரசங்கத்திற்காக அதானும் சொல்லப்பட்டது. வழமையாக ஐவேளைத் தொழுகைக்கும் அதானொலிப்பது என் செவிகளுக்கு உணர்த்தப்பட்டாலும் அதிலிருந்து விதிவிலக்கானவன்போல் நான் வேறு திசையில் சென்றுவிடுவேன். அன்றும் அப்படித்தான் பலரும் பள்ளிவாயிலை நோக்கி நடைபோட நாமோ ஆழ்கடல்நோக்கி எமது ஓடத்தைச் செலுத்திக்கொண்டிருந்தோம்.

சுழியோடும் கருவிகளோடு கடலினுள் குதித்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில்தான் எதிர்பாராத விதமாக திடீரென அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தது. இப்போது நினைக்கும்போதும் என் உடலெங்கும் நடுக்கம்கொள்கின்றது. வாயினுள் நீர்செல்லாது மூக்கு, வாய் இரண்டையும் மூடி தேவைக்கேற்ப ஒட்சிசன் வாயுவைத் தந்துகொண்டிருந்த அந்த இறப்பர் குழாய் உடைந்துவிட்டது.

நான் தினரினேன். எனது நுரையீரல் வலுவாக அழுத்தப்பட்டது. இதயம் நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். கடல் நீரும் வாயினுற் புகுந்து தொண்டைக்குழியை அடைத்தது. உடல் அங்கங்கள் தடுமாறின. நுரையீரல் சுவாசிக்க ஒட்சிசனைக்கேட்டுப் போராடியது. என்னைச் சுற்றி இருள் கவ்விக்கொண்டது. நண்பர்களோ என்னைவிட்டும் வெகு தூரத்தில் இருந்தார்கள். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. என் வாழ்வின் நினைவுகள் என் கண்முன் அலைமோதின.

மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை அன்றுதான் நான் அறிந்துகொண்டேன். அல்லாஹ் அவனது வல்லமையை சில நிமிடங்களில் எனக்கு உணர்த்திவிட்டான். அவனிடம் உதவிதேடினேன். நான் செய்த அசட்டுத்தனங்கள் எனக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் படம்போட்டுக்காட்டப்பட்டன. “கலிமா...” அதுதான் என் நினைவுக்கு வந்தது.

“அஷ்ஹது” என்று மொழிந்ததுதான் தாமதம் தொண்டைக்குழி விக்கிக்கொண்டது. நான் கலிமாவை மொழிய முனையும்போதெல்லாம் மறைவிலிருந்து ஒருகை என் கழுத்தை நெரிப்பதுபோன்றிருந்தது. கடுமையாக முயற்சித்தேன். முடியவில்லை. “இறைவா என்னை மீட்டிவிடு... என்னைக் காப்பாற்று...” என்று உள்ளம் கத்திக் கதறியது.

“ஒரு நிமிடம்..... நிமிடம்..... ஒரு வினாடி..... ” என்று கெஞ்சியது. எவ்வித சாத்தியப்பாடுகளுமில்லை. உணர்ச்சிகளனைத்தையுமே இழந்துவிட்டேன். இறைவனை நினைக்கும் கடைசித்தருனம். நான் மூர்ச்சிக்கலானேன். திடீரென்று.....

திடீரென்று ஒரு காற்று என்நெஞ்சை உந்தித்தள்ளியது. சூழ்ந்திருந்த இருள் அகன்று போனது. என் விழிகள் திறந்துகொண்டன. நான் கண்டேன்.... என் வாயில் ஒட்சிசன் குழாயைவைத்துப் பொருத்தும் ஒரு நண்பரை அங்கு நான் கண்டேன். அவர் எனக்கு மென்மேலும் உதவ முயற்சித்தார். அவர் முகத்தில் புன்னகையையே நான் அவதானித்தேன். அதிலிருந்து நான் நலமாக இருக்கின்றேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அக்கணம் என் உடல் அங்க அவயங்கள் அனைத்தும் கலிமாவை மொழிந்தன. இறைவனுக்கு நன்றியுரைத்தன. கடல் நீரோடு கண்ணீரும் கரைந்துகொண்டிருந்தது....

அதன் பின் நான் நலமாக கடலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். சிகிச்சையும் பெற்றேன். அன்றிலிருந்து என் வாழ்க்கைப்போக்கு முற்றாக மாற்றங்கண்டிருந்தது. அதிகமதிகம் அல்லாஹ்வைத் தொழுபவனாகவும் அவனுக்கு நன்றியுரைப்பவனாகவும் மாறியிருந்தேன்.

நாட்கள் புரண்டன. ஒரு நாள் ஆழ் கடலில் எனக்கு நேர்ந்த அந்தப் பயங்கர சம்பவம் என் நினைவுக்கு வந்தது. உடனே சுழியோடும் சாதனங்களோடு ஆழ்கடலினுள் தனியாகவே சென்றேன். அதே இடத்தை அடைந்ததும் மனம் நிரம்ப அல்லாஹ்வைப் புகழந்து அவனுக்காக சிரம்பணிந்தேன். அதனைப்போன்றதொரு ஸ்ஜுதை என் வாழ்வில் நான் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கு முன்பு அவ்விடத்தில் வேறுயாரும் அவ்வாறு ஸ்ஜுது செய்திருப்பார்களென்றும் நான் நினைக்கவில்லை.

அந்த இடம் நாளை மறுமையில் எனக்காக அல்லாஹ்விடம் சான்று பகரும். சிலவேளை நான் அந்த ஆழ்கடலில் சிரம் தாழ்த்தியமைக்காக அல்லாஹ் எனக்கு அருள்பாலித்து என் பாவங்களை மன்னிக்க்கூடும்.

அனைத்துக்கும் அவனே போதுமானவன்.
இது கதையல்ல நிஜம்
நன்றி : அல்-முஜ்தமா

Saturday, November 6, 2010

பித்அத் தவிர்ப்போம்!

Posted by Rikaz Network Inc. 6:26 AM, under | No comments

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி

“அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும்.

பித்அத்:
“பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் பாஷை ரீதியான அர்த்தங்களாகும்.

“வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது என்ப தையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?” (2:117)

இங்கே வானம்-பூமியை எவ்வகை முன்னுதாரணமுமின்றி முதன்முதலில் உருவாக்கியவன் என்ற அர்த்தத்தில் ஃபதீஃ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறே;

“நான் தூதர்களில் புதியவனாக இல்லை.”
(46:9)

என்ற வசனத்தில் எனக்கு முன்னரும் தூதர்கள் வந்துள்ளனர். நான் முதன்முதலாக வந்த தூதனல்ல என்ற அர்த்தத்தில் “பித்அன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் “பித்அத்” என்பது பாஷை ரீதியில் புதியது என்ற அர்த்தத்தைத் தரும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

மொழி ரீதியாகப் “புதியது” என்பது இதன் அர்த்தமென்றாலும், இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் அங்கீகாரமில்லாத மார்க்கத்தின் பெயரால் நிறைவேற்றப்படும் விடயங்கள் “பித்அத்” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் நோக்கும் போது, உலகத்திலுள்ள எல்லாப் புதியவைகளும் பித்அத்தில் வந்து சேராது. உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் அவர்களது காலத்திலிருந்த ஒட்டகம், கழுதை போன்றவற்றில் பயணம் செய்தார்கள். நாம் வாகனங்களிலும், விமானங்களிலும் பயணம் செய்கின்றோம். ஷரீஆ ரீதியில் இது பித்அத் – புதியதில் அடங்குமா? என்றால் அடங்காது. மொழி ரீதியில் இவையெல்லாம் பித்அத்தான – புதிய கண்டுபிடிப்புகள் என்றாலும் இவை மார்க்கத்தில் உருவான புதியவை கிடையாது. சிலர் இரண்டையும் போட்டுக் குழப்பி விடுகின்றனர். அது மட்டுமல்ல! நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் பயணம் போகவில்லை. நாம் போகின்றோம். எனவே, நபி(ஸல்) அவர்கள் செய்யாத புதிய அமல்(?)களையும் நாம் செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.

தவறான புரிதலை வைத்துத் தமது தவறை நியாயப்படுத்தவும், அத்தவறு சரியானதுதான் எனச் சாதிக்கவும் முற்படுகின்றனர். எனவே, ஷரீஆ ரீதியில் “பித்அத்” என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“…அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துறவறத்தை அவர்கள் புதிதாக உருவாக்கிக் கொண்டனர். அதை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அதை அவர்கள் அதற்குரிய முறைப்படி பேணவுமில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டோருக்கு அவர்களுக்குரிய கூலியை வழங்கினோம். அவர்களில் அதிகமானோர் பாவிகள்.” (57:27)

இந்த வசனம் சில அம்சங்களைப் பின்வருமாறு கூறுகின்றது;

கிறிஸ்தவர்கள் மீது துறவரம் – அதாவது, திருமணம் முடிக்காமல் தமது வாழ்வை இறை வழிபாட்டுக்காக ஒதுக்குவது விதிக்கப்படவில்லை.
அதை அவர்கள் தாமாகவே தம் மீது விதித்துக்கொண்டனர்.
அதை அவர்கள் இறை திருப்பதியைப் பெறும் நோக்கத்தில்தான் உருவாக்கினர்.
எனவே, “பித்அத்” என்றால்;

ஆதாரம் அற்றதாக இருக்கும்.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.
அது உருவாக்கப்பட்ட நோக்கம் நல்லதாக இருக்கலாம். (ஆனால், நன்மை கிடைக்காது.)
மேற்படி முக்கிய அடையாளங்கள் பித்அத்தில் இருக்குமென்பதை இந்தக் குர்ஆன் வசனம் மூலம் விளங்கலாம். இதே கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

பித்அத் குறித்து அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தும் போது பின்வருமாறு பல விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இமாம் இப்னு தைமிய்யா(றஹ்) அவர்கள் இது குறித்து கூறும் போது;

“மார்க்கத்தில் பித்அத் என்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ மார்க்கமாக விதிக்காதவையைக் குறிக்கும். பித்அத் என்றால் கட்டாயப்படுத்தியோ அல்லது விரும்பத் தக்கது என்றோ ஏவப்படாததைக் குறிக்கும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பதாவா இப்னு தமிய்யா 4:107-108)

மனித செயற்பாடுகளை “இபாதத்”, “ஆதத்” என இரு வகையாகப் பிரிக்கலாம். “இபாதத்” என்பது வணக்க வழிபாட்டைக் குறிக்கும். “ஆதத்” என்றால் சாதாரண பழக்க-வழக்கங்கள், வழக்காறுகளைக் குறிக்கும். இபாதத் விடயத்தில் அதைச் செய்வதற்கு “ஆதாரமிருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். ஆதாரமில்லாதவை செய்யத் தகாதவையாகும். “ஆதத்”தான விடயங்களைப் பொறுத்த வரையில் “தடை இருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். தடையில்லாத அனைத்தும் ஆகுமானவை என்பதே அர்த்தமாகும். தடை இல்லாவிட்டால் ஆகுமானது என்பது ஆதத்தின் நிலையாகும். அங்கீகாரத்திற்கான ஆதாரம் இல்லாவிட்டால் கூடாது என்பது இபாதத்தின் நிலைப்பாடாகும்.

ஒருவர் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு தொழுகிறார். இதை நாம் கூடாது என்கிறோம். உடனே “முதுகுக்குப் பின்னால் கை கட்டித் தொழக் கூடாது என்று ஆதாரம் தாருங்கள்!” என அவர் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் எம்மால் காட்டவும் முடியாது. இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்தார்கள் அல்லது செய்யச் சொன்னார்கள் அல்லது அங்கீகரித்தார்கள் என்பதற்கே ஆதாரம் தேட முடியாது. எதைச் செய்ய ஆதாரம் கிடைக்கிறதோ அதை அப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றம் செய்ய முடியாது.

ஆனால் “ஆதத்” விஷயம் இதற்கு நேர் மாற்றமானதாகும். கேக் சாப்பிடலாம், குளிர் பானங்கள் குடிக்கலாம், பணிஸ் சாப்பிடலாமென்று ஒவ்வொன்றுக்காக ஆதாரம் தேட முடியாது. தடுக்கப்பட்டவை கூறப்பட்டிருக்கும். தடுக்கப்படாதவை அனைத்தும் ஆகுமானவையென்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும். சிலர் இந்த விடயத்தையும் குழப்பிக்கொள்கின்றனர்.

“கூட்டு துஆ” கூடாது என்றால், “கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்கின்றனர். இதைச் செய்பவர்தான் ஆதாரம் காட்ட வேண்டுமென்ற அடிப்படையைப் புரியாமல் இப்படிக் கேட்கின்றனர்.

அல்லது ஒலிபெருக்கியில் அதான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? மத்ரஸாக் கட்ட என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்டுத் தமது பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

எனவே ஏற்கனவே நாம் குறிப்பிட்ட (57:27) வசனத்தின் படியும், ஏலவே நாம் குறிப்பிட்ட இமாம் இப்னு தைமிய்யாவின் வரைவிலக்கணப் படியும் ஆதாரமில்லாத (இபாதத்) வழிபாடு-மார்க்க நிலைப்பாடு என்பவை பித்அத்தானவை என்பதையும், அவற்றைத் தவிர்ப்பது கட்டாயமென்பதைப் புரியலாம்.

இமாம் இப்னு தைமிய்யாவின் மற்றொரு விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது;

“குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும், இந்த உம்மத்தின் ஆரம்ப கால ஸலஃபுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத்களாகும்!”.
(ஃபதாவா இப்னு தைமிய்யா 18:346, 35:414)

குர்ஆன்-ஸுன்னாவில் இல்லாத இறை வழிபாட்டைச் செய்வது பித்அத் என்பது போன்றே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணான கொள்கை-கோட்பாடுகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மற்றும் சில அறிஞர்களைப் பொறுத்த வரையில் குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படுவதை பித்அத்தில் சேர்க்காமல் பாவத்தில் மட்டுமே சேர்ப்பர். உதாரணமாக, மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஒருவர் வலது காலை முன்வைத்து உள்நுழைய வேண்டும். ஆனால் ஒருவர் இடது காலை முன்வைத்து நுழைகிறார். இது ஸுன்னாவுக்கு முரணானதாகும். ஆனால் “இது பித்அத்தா?” எனக் கேட்டால், “பித்அத்!” என்று கூறப்பட மாட்டாது. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணானதாக இருந்தால்தான் அது பித்அத் என்று கூற முடியாது என்று விளக்குவர்.

இந்த விளக்கம் நியாயமானதென்றாலும், இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைந்தவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டால், அவர் “தவறுதலாக நடந்து விட்டது!” என்றோ, அசட்டையாகத் தனது பொடுபோக்கால் நடந்ததாகவோ கூறினால் அது பித்அத்தாகாது என்பது உண்மையே! ஆனால், அவர் இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைவதுதான் மார்க்கமென்று அதற்கு மார்க்கச் சாயம் பூசினால் அப்போது அந்தத் தவறு பித்அத் என்ற நிலைக்கு வந்து விடும். எனவேதான் குர்ஆன்-ஸுன்னாவுக்கும், ஸலஃபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தனது கூற்றிற்கு அவர் உதாரணம் கூறும் போது;

“கவாரிஜ்கள், ஷீஆக்கள், கதரிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்றோர் கொண்டிருந்த குர்ஆன்-ஸுன்னா, ஸலபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கு முரணான கொள்கைகள் பித்அத்தாகும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறே “பள்ளியில் பாட்டுப் பாடி, இசை இசைத்துக் கூடி திக்ர் செய்வோர், தாடி வழிப்பது, கஞ்சா அடிப்பது போன்றவற்றை நன்மை நாடி செய்வோர் போன்றவர்களும் பித்அத்வாதிகள்..” என்று குறிப்பிடுகின்றார்கள்.

தாடியை வழிப்பதும், கஞ்சா அடிப்பதும் ஹறாமாகும். எனினும் இவர்கள் இவற்றை மார்க்கமாகக் கருதிச் செய்கின்ற போது அவை பித்அத்தாகவும் மாறுகின்றன. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணாக இருப்பவையும் பித்அத்தாகும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

நன்மையை நாடுதல்:
நன்மையான எல்லா விடயங்களையும் நபி(ஸல்) அவர்கள் எமக்குக் காட்டித் தந்து விட்டார்கள். குறிப்பிட்ட ஒரு வழிபாட்டை அல்லது கொள்கையை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தரக் கூடியது என்று கூறுவதென்றால் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத் என்ற பட்டியலில் அடங்கி விடும்.

இது குறித்து இமாம் ஷாதிபீ(றஹ்) அவர்கள் விளக்கும் போது;

ஷரீஅத்திற்கு ஒப்பாக மார்க்கத்தில் புதிதாக உருவானதே பித்அத்தாகும். அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.

“இங்கே மார்க்கத்தில் புதிதாக உருவான ஒரு வழிமுறை என்று குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கதாகும்!”

உலகியல் நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைப் பயன்படுத்துவது பித்அத்தில் அடங்காது. மார்க்க நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைச் செய்வதுதான் தடுக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் மார்க்கம் பூரணமாகி விட்டதாகக் கூறுகின்றான்;

“..இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்..” (5:3)

உலகம் பூரணமாகவில்லை. அது வளர்ந்துகொண்டேயிருக்கும். அதில் தடுக்கப்பட்டவை தவிர்ந்த அனைத்தையும் பயன்படுத்தலாம். ஆனால், மார்க்கத்தின் பெயரில் “இதைச் செய்தால் நன்மை கிடைக்கும்!”, “இதை இப்படித்தான் செய்ய வேண்டும்!” என்று கூறுவதென்றால், அதற்கான வழிகாட்டல் கட்டாயம் குர்ஆன்-ஸுன்னாவின் மூலம் பெற்றிருக்க வேண்டும். இல்லாத போது அவை பித்அத்களாக இருக்குமே தவிர இபாதத்தாக இருக்காது.

இந்த அடிப்படையில் புரியாமல்தான் பஸ்ஸில் பயணம் போவதையும், விமானத்தில் பறப்பதையும் வைத்துக் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி, ஃபாதிஹா, மவ்லீதை சில அறிஞர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.

இமாம் ஹாஃபிழ் இப்னு றஜப்(றஹ்) பின்வருமாறு கூறுகின்றார்கள்;

“பித்அத் என்றால் அதற்கு ஆதாரமாக அமையத் தக்க எந்த அடிப்படையும் ஷரீஅத்தில் இருக்காது. ஷரீஅத்தில் ஆதாரமிருந்தால் பாஷை ரீதியில் அது பித்அத் என்று கூறப்பட்டாலும் ஷரீஆவின் பார்வையில் அது பித்அத் ஆகாது. யாராவது ஒருவர் ஒரு புதிய விடயத்தை ஆரம்பித்து, அவர் அதை மார்க்கத்துடன் இணைத்தால் அதற்கு மார்க்க அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமலிருந்தால் அது வழிகேடாகும். “தீன்” அதை விட்டும் விலகி விட்டது. அந்தப் (ஆதாரமற்ற, மார்க்கமெனக் கருதப்படும்) புதிய செய்தி) கொள்கை சார்ந்த விடயமாக இருந்தாலும் சரி, செயல் சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்க-மறைமுக வார்த்தை(திக்ர்)களாக இருந்தாலும் சரியே! (அவை வழிகேடுகளே!)

ஸலஃபுகள் சில புதியவைகளை “நல்லது!” என்று கூறியிருந்தால், அவை “பாஷை ரீதியான பித்அத்” என்பதையே குறிக்கும்; ஷரீஆச் சார்ந்த பித்அத்தைக் குறிக்காது.

றமழான் மாதத்தில் “கியாமுல் லைல்” தொழுகையை உமர்(ரழி) அவர்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழ ஏற்பாடு செய்து.

மக்கள் அவ்வாறு தொழுவதைக் கண்டு;

“இந்தப் புதிய நடைமுறை நன்றாக உள்ளது!” என்று கூறியதும் இதே அடிப்படையில்தான்.
(பார்க்க; ஜாமிஉல் உலூம் வல்ஹிகம் 2:127-128)

அதாவது, உமர்(ரழி) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை மக்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழுவதைக் குறிக்கும் போது “இந்த பித்அத் நல்லது!” என்று கூறினார்கள். இது “ஷரீஆ ரீதியான பித்அத்” என்ற அர்த்தத்தில் அவர் கூறவில்லை.

ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை ஆர்வப்படுத்தியுள்ளார்கள். அவர்களும் சில தினங்கள் ஜமாஅத்தாகத் தொழுவித்தார்கள். அது கடமையாக்கப்பட்டு விட்டால் உம்மத்திற்குச் சிரமமாகி விடும் என்பதற்காகத்தான் ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டார்கள். அவர்களது மரணத்தின் பின்னர் அந்த அச்சம் தீர்ந்து விட்டது. நபியவர்களின் மரணத்தின் பின் அது வாஜிபாக மாட்டாது. எனவே, ஜமாஅத்தாகத் தொழுவதற்கு ஒரு தடையாக இருந்த அச்சம் நீங்கி விட்டது. அடுத்து மக்கள் சிறு சிறு குழுக்களாகவும், தனித் தனியாகவும் பல அமைப்புகளில் தொழுது வந்தார்கள். அதை மாற்றி அனைவரும் ஒரு முகமாக ஒரே இமாமின் கீழ் தொழுவதற்கான ஏற்பாட்டையே உமர்(ரழி) அவர்கள் செய்தார்கள். அதையே அவர்கள் “நல்ல பித்அத்” என்றார்கள். இங்கே ஷரீஆ ரீதியான பித்அத்தாக அதை அவர் பார்க்கவில்லை. ஏனென்றால், “பித்அத்” என்றால் அதற்கு ஷரீஆவில் ஆதாரமிருக்காது. ஆனால், “கியாமுல் லைல்” தொழுகையை றமழானில் ஜமாஅத்தாகத் தொழ நபிவழியில் ஆதாரமுள்ளது. எனவே, பாஷை ரீதியில்தான் “இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக உள்ளது!” என்று கூறினார்கள். இதைப் புரிந்துகொள்ளாத சிலர் “பாஷை ரீதியான பித்அத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டு, “பித்அத்தில் நல்ல பித்அத்களும் உள்ளன!” எனத் தவறாக வாதிடுகின்றனர். இது மிகத் தவறான கருத்தாகும்.

பித்அத்களை மார்க்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதில் “நல்லது!” என்ற பேச்சுக்கே இடமில்லை. “பித்அத்கள் அனைத்தும் வழிகேடு!” என்பதே நபி(ஸல்) அவர்களது “பித்அத்” பற்றிய தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்போமாக!

Wednesday, November 3, 2010

கடல்கள் இடையே உள்ள திரைகள்

Posted by Rikaz Network Inc. 6:21 AM, under | No comments

கடல்கள் இடையே உள்ள திரைகள்


in அறிவியல்

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)

அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.

இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.

ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.


وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.

இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும்






--
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook