NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Sunday, February 13, 2011

பணம்தான் வாழ்க்கை – வெளிநாட்டில் கணவன் மனநோயாளி மனைவி

Posted by Rikaz Network Inc. 4:38 AM, under | No comments

அல் ஹஸனாத் மாதாந்த சஞ்சிகையில் வெளியான இந்த ஆக்கத்தை அதன் முக்கியத்துவம் கருதி நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.

“எனது கணவர் மிக மிக நல்லவர். ஆனால் இது வரை அவர் என்னைப் புரிந்து கொண்டதில்லை புரிந்து கொள்ள முயன்றதுமில்லை.”

இவ்வாறு தனது மனத் துயரத்தை சொல்லிக் கண்ணீர் சிந்திய அந்த சகோதரியை நாம் சந்தித்தது எங்கே தெரியுமா? ஒரு மனநல மருத்துவமனையில்! இந்த சகோதரியின் குடும்ப வாழ்க்கை அவரை மனநல மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கும் அளவிற்கு அவரை பாதித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நம் சமூகத்திற்கு சிறந்த படிப்பினைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

“எனது கணவர் வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருக்கிறார். மாதா மாதம் பணம் அனுப்புகிறார். எனது இரண்டு மகள்மார் மத்ரஸாவில் கல்வி பயில்கின்றனர். இன்னும் ஒரு மகள் பாடசாலையில் கல்வி கற்கிறாள். அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்வது, அழைத்து வருவது, கரண்ட் பில், தண்ணீர் பில், டெலிபோன் பில் செலுத்துவது உட்பட வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நானே சென்று வாங்கி வரவேண்டும். வீட்டிலும் நாள் முழுவதும் வேலைதான். இப்படியே என் வாழ்க்கை ஓர் இயந்திரம் போன்று ஆகிவிட்டது.”
குடும்பச் சுமையை சுமக்க கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பாடுபடவேண்டும். அப்போதுதான்  வாழ்க்கைச் சுமையை சமாளிக்க முடியும். ஒரு பெண் மட்டும் தனி யாக இருந்து அச்சுமைகளை சமாளிப்பது என்பது எவ்வளவு பெரிய துன்பம் என்பது அந்த நிலையை அனுபவிப்பவர்களால் மட்டும்தான் உணர முடியும்.

“பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு தேடி ஆண்கள் வெளிநாடு சென்று அங்கு பல ஆண்டுகளைக் கடத்துகிறார்கள். அப்படித்தான் என் கணவரும் சென்றார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். சில ஆண்டுகால உழைப்போடு மனைவி, பிள்ளைகளோடு சேர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரிடம் அப்படி ஒரு நினைப்பு இருப்பதாகக்கூட தெரியவில்லை. பணம் மட்டும்தான் வாழ்க்கை என நினைக்கிறார். பணமே அனைத்துக்கும் போதுமானது  என எண்ணுகிறார். அவ்வாறு எண்ணுவது தவறு. அந்த தவறின் பாரதூரம் என்னைப் பைத்தியக்காரியாக ஆக்கி இந்த மனநல மருத்துவமனையில் அடைத்து வைத்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?

எனது கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அதன் காரணமாக அவருக்குத் தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் நானேதான் செய்வேன். என் பிள்ளைகளுக்குக்கூட அந்த சந்தர்ப்பத்தை நான் வழங்குவதில்லை. ஆனால், அவர் எனது அன்பைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. பிரிந்து வாழ்வதிலேயே அதிக காலத்தைச் செலவிடுகிறார். பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இலங்கையிலும் அவரால் உழைக்க முடியும். “ஏராளமான குடும்பஸ்தர்கள் தம் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து, இங்கேயே உழைத்து சந்தோஷ மாக வாழத்தானே செய்கிறார்கள். அதுபோல் நாமும் சந்தோஷமாக வாழலாம். இலங்கைக்கே வந்து விடுங்கள்” என முடியுமான வரையில் கெஞ்சி அழுது விட்டேன். ஆனால், அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லை!

வாழ்வோடும் சாவோடும் இங்கே நான் தனியாக போராடிக் கொண்டிருக்கிறேன். அவரது குடும்பத்தவர்களால் ஏராளமான பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சின்னச் சின்ன விடயங்களைக்கூட பெரும் பிரச்சினையாக ஆக்கிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் அவற்றை தாங்கக்கூடிய சக்தி என்னிடம் இல்லை. ஒரு மனைவிக்கு பலத்தைத் தருவது கணவனது அன்பு ஒன்றுதான். ஆனால், அந்த அன்பே இல்லை என்று ஆகிவிட்டால் அவளது நிலை என்னவாகும்? என் வேதனையும் தொடர்கதையாகிப் போன இந்த விரக்தியான வாழ்வும் என்னை ஒரு கோழையாக்கி விட்டது.

எனது கணவர் வெளிநாட்டில் உழைப்பதால், நான் வசதியோடு பெரிய வாழ்க்கை வாழ்வதாக  எண்ணி என் குடும்பத்தவர்கள் தமது கஷ்டங்களைச் சொல்லி உதவி பெற வருவதுண்டு. இப்போதெல்லாம் அவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வருகிறது. சில வேளைகளில் கோபத்தை என்னால் கட் டுப்படுத்த முடிவதில்லை. “என் துயரங்களைக் கேட்க ஆளில்லாமல் நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எதற்காக உங்கள் பிரச்சினைகளை என் நெஞ்சில் சுமத்துகிறீர்கள்?” என அவர்களை கூச்சலிட்டு துரத்தி விட்டேன். இது சரியா, பிழையா என்றெல்லாம் என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. பித்துப் பிடித்தவளைப் போல் ஆகிவிடுகின்றேன்.

பிள்ளைகளுக்காக என்னை நிதானப்படுத்த முயன்றேன். என் கணவரிடம் தொலைபேசியில் எதையாவது சொன்னால் சீறிப் பாய்கிறார். “உங்களுக்குப் போதுமான பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? அதை வைத்து ஒழுங்காக வாழத் தெரியாதா? எதற்காக அங்குள்ள பிரச்சினைகளை சொல்லி என் நிம்மதியைக் கெடுக்கிறீர்கள்?” என ஏசுகிறார். நான் யாரிடம் சொல்லுவது? எனக்கு ஆறுதல் தருவது யார்? இப்படி எண்ணி இரவு பகலாக அழுதழுது பேதலித்துப் போனேன்.”

“வாழ்க்கை என்றால் இவ்வளவு தானா?” என்று என் கணவரிடம் வினவினேன். “ஆமாம்! இவ்வளவு தான்” என்கிறார். இதை என்னால் ஏற்க முடியவில்லை.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவரது நேசம் அவசியம். பணம்தான் வாழ்க்கை என்றால் திருமணம் என்ற ஒன்று எந்தப் பெண்ணுக்கும் தேவையில்லை. நகையும் ஆடம்பர வாழ்வும்தான் ஒரு பெண்ணின் தேவை என்றால் கணவர் என்றொரு உறவு எந்தப் பெண்ணுக்கும் அவசியமில்லையே! திருமணங்களின் மகத்துவம் உணரப்படாமையினால் பலருடைய வாழ்வு இவ்வாறு அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

“நான் சிறு பராயத்திலேயே தாயை இழந்துவிட்டேன். அதனால் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் மிகவும் ஏங்கியிருக்கிறேன். எனது மூத்த சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்தேன். நான் பருவமடைந்த பிறகு என் சகோதரியின் கணவர் முற்றிலும் மாறிவிட்டார். அவர் தனது மகளைப் போன்றோ ஒரு சகோதரியைப் போன்றோ என்னை  நினைத்துப் பார்க்கவில்லை. அடிக்கடி என்னை தொல்லைப்படுத்தத் துவங்கிவிட் டார். அவரது முரட்டுக் குணத்திற்கு அஞ்சி என் சகோதரியும் எதுவுமே பேசுவதில்லை.

அத்தோடு நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். கொழும்புவரை வந்து ‘ஸ்ரீங்வெல்ல பஸ்ஸில் ஏறினேன். என்னை ‘‘ஸ்ரீங்வெல்ல பகுதியில் இறக்கி விட்டார்கள். அங் கிருந்து திரும்ப கடுவெல வரையில் நடந்து வந்தேன். அதன் பிறகு என்னை நான்கு ஆண்கள்  பின்தொடர ஆரம்பித்தனர். நான் மிகவும் அச்சத்தோடு வந்து கொண்டிருக்கும்போதுதான் உங்களது சகோதரியின் கணவர் என்னைக் காப்பாற்றி உங்களிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு பல ஆண்டுகள் உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வாழ்ந்தேன். எனது தந்தை மீண்டும் என்னை அழைத்துக் கொண்டு போனதோடு ஒருவருக்கு என்னைத் திருமணமும் செய்து வைத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இனிமேல் நிம்மதியாக வாழலாம் என நம்பினேன். ஒன்றுவிடாமல் என் கதைகளை அவரிடம் சொன்னேன். சிலகாலம் என்னோடு சந்தோஷமாக வாழ்ந்தவர் வெளிநாடு என்று பயணித்ததோடு என்னைவிட்டு உள்ளத்தால் வெகுதூரம் பிரிந்து சென்று விட்ட தாகவே தோன்றுகிறது.

தயவுசெய்து சொல்லுங்கள். எனக்கு  என்னதான் தீர்வு?”

அவருக்கு ஏற்ற பதிலையும் தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறிவிட்டு வேதனையோடு வெளியேறினோம்.

இதுபோன்ற பிரச்சினைகளில் ஏராளமான குடும்பங்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர்மார் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதில் தவறில்லை. ஆனால் அந்த நிலை தொடரும்போது பல விபரீத விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

கணவர்மார் வெளிநாடு செல்வதன் காரணத்தால் தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண்கள் பல துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஆயினும், இறை பக்தியுடைய பெண்கள் தமது உள்ளத்தையும் உணர்வுகளையும் இறைவனது பாதுகாப்பில் ஒப்படைத்து விடுகின்றனர். இறைவனும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விடுகிறான். எத்தகைய துன்பங்கள் நேர்ந்தாலும் அவர்கள் தளர்ந்து போவதில்லை. காரணம் அவர்களது ஈமான்.

அந்த ஈமான் எல்லாப் பெண்களிடமும் இருக்குமானால் வேறு துன்பங்களுக்கு இடமே இருக்காது. ஆயினும், அந்தப் பெண்ணிடமும் இதயம் என ஒன்று இருக்கிறது. அந்த இதயத்திலும் ஏக்கங்களும் தவிப்புகளும் ஏராளமாக உறைந்திருக்கும். அது இறைவனது பாதுகாப்பில் கட்டுப்பட்டு பக்குவப்பட்டு இருந்தபோதும், அது தன் கணவரது அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கிய நிலையில் இருக்கும் என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்வது மிக அவசியம்.
தம் கணவரோடு சேர்ந்துவாழும் பெண்களிடம் காணப்படும் உற்சாகமும் தைரியமும் கணவனைப் பிரிந்த அல்லது கணவரை இழந்த பெண்களிடம் காண்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஏதோ ஒரு வகையான விரக்தி அவர்களை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு குடும்பப் பெண்ணின் உற்சாகமும் தைரியமும் அவனது கணவரது துணையிலேயே நிறைவடைகிறது என்பதுதான் உண்மை.

இரவில் எரிந்து, விடிந்ததும் அணைந்து போகின்ற தீபம் போன்றது அல்ல குடும்ப வாழ்க்கை. கணவன் மனைவி இருவரது இணக்கமும் நெருக்கமும் அக்குடும்பத்துக்கே ஒளிதரக்கூடிய தீபம் போன்று பிர காசிக்க வேண்டியது. இருவரிடமும் தூய்மையான பாசமும் நேசமும் இருக்குமானால் எந்தவொரு சூழ் நிலையையும் அவர்களால் எதிர்கொள்ள முடியும்.
ஒரு கணவன் தனது மனைவி தன்னை எந்தளவு நேசிக்கிறாள் என ஆராய்வதைவிட “நான் அவளை எந்தளவில் நேசிக்கிறேன்?” என தன்னை மீள்பரிசீலனை செய்வதே மேலான செயல். இந்த ஆய்வு ஒரு மனைவிக்கும் பொருந்தும்.

இது சரிவர அமைந்தால் இந்த மனநல மருத்துவமனை விஜயங்கள் அவசியப்படாது!

0 comments:

Post a Comment

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook